Home /News /salem /

மருத்துவர் பரிந்துரையின்றி கர்ப்பிணி-க்கு கருக்கலைப்பு மாத்திரை - சேலத்தில் மெடிக்கலுக்கு சீல்

மருத்துவர் பரிந்துரையின்றி கர்ப்பிணி-க்கு கருக்கலைப்பு மாத்திரை - சேலத்தில் மெடிக்கலுக்கு சீல்

சீல் வைக்கப்பட்ட மருந்தகம்

சீல் வைக்கப்பட்ட மருந்தகம்

Salem | ஆத்தூர் அருகே மருத்துவர் பரிந்துரையின்றி கர்ப்பிணி பெண்ணுக்கு கருக்கலைப்பு மாத்திரை வழங்கிய மருந்தகத்திற்கு  வருவாய்த்துறையினர் சீல் வைத்தனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Salem, India
சேலம்  மாவட்டம்  கருமந்துறைக்கு  உட்பட்ட குன்னூர்  பகுதியை  சேர்ந்த 38 வயதுடைய  பெண்மணி ஒருவர் கர்ப்பமாக  இருந்துள்ளார். இவர் மருத்துவர் பரிந்துறையின்றி கருமந்துறையில்  உள்ள தனியார் மருந்துக்கடையில் கருக்கலைப்பு மாத்திரையை  வாங்கி உட்கொண்டுள்ளார்.

இதன்காரணமாக இவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு ஆபத்தான  நிலையில் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவ கல்லூரி  மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.  அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அளித்த தகவலின்  அடிப்படையில் சேலம் குடும்பநல துணை இயக்குனர் வளர்மதி மற்றும் மாவட்ட மக்கள் கல்வி தகவல் தொடர்பு அலுவலர் இளங்கோ உள்ளிட்ட வருவாய்த்துறையினர், சுகாதாரத்துறை அதிகாரிகள் கருமந்துறையில் உள்ள அந்த மருந்தகத்திற்கு சென்று சோதனை  மேற்கொண்டனர்.

அவர்களிடமிருந்து  சரியான  முறையில் எந்தவித ஆவணங்களும் பெற முடியாததால் பெத்தநாயக்கன் பாளையம் தாசில்தார் , உள்ளிட்ட காவல் துறையினர் ஆகியோர் முன்னிலையில் மருந்தக கடையை ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள் மருத்துவர் பரிந்துரையின்றி மருந்து மாத்திரைகள் விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. இதனையடுத்து அந்த மருந்தகத்திற்கு  வருவாய்த்துறையினர் முன்னிலையில் சீல்  வைக்கப்பட்டது.

Also see... CUET - UG தேர்வு முடிவுகள் வெளியானது..!

பொதுமக்கள்  கருக்கலைப்பு செய்ய முடிவு செய்தால், அரசு மருத்துவமனை, மேம்படுத்தப்பட்ட  அரசு ஆரம்ப சுகாதார  நிலையம், மற்றும் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் இலவசமாக அதி நவீன முறையில் கருக்கலைப்பு செய்யப்படும். மேலும் கருகலைப்பு செய்தவருடைய விவரங்கள் இரகசியமாக காக்கப்படும் என்பதை வருவாய்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Published by:Vaijayanthi S
First published:

Tags: Attur Constituency, Crime News, Doctors, Medical shop, Medicine, Revenue department, Salem

அடுத்த செய்தி