ஹோம் /நியூஸ் /Salem /

மேகதாது அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும் - பி.ஆர்.பாண்டியன் கோரிக்கை

மேகதாது அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும் - பி.ஆர்.பாண்டியன் கோரிக்கை

பி.ஆர்.பாண்டியன்

பி.ஆர்.பாண்டியன்

Salem : மேட்டூர் அணையிலிருந்து 18,000 கன அடி தண்ணீர் திறக்க வேண்டும் என தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் கோரிக்கை விடுத்துள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டும் முயற்சியை, வருகிற 17ம் தேதி கூட உள்ள காவிரி மேலாண்மை வாரிய கூட்டத்தில் தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் சேலத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகளிடம் மனு கொடுத்தார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தவர்,  “சேலம் மாவட்டத்தில் ஓடும் திருமணிமுத்தாற்றில் சாய பட்டறை கழிவு நீர் கலந்து செல்கிறது. இதனால் சாகுபடி பாதிக்கப்படுவதோடு, நிலத்தடி நீர் பாதிக்கப்படுகிறது. காவிரி ஆறு உட்பட ஒட்டுமொத்த காவிரி துணை ஆறுகளும் கழிவு நீரால் மாசுபடுகிறது. இதனால் மிகப்பெரிய அழிவை சந்திக்க நேரிடும். உடனே இதனை தடுக்க வேண்டும். இதனை தடுக்க, நீதிபதி தலைமையில் குழு அமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

18,000 கன அடி தண்ணீர் திறக்க வேண்டும்

மேட்டூர் அணையிலிருந்து இந்த ஆண்டு முன்னதாகவே பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் நாற்று நட்டு உள்ளனர். தற்போது திறக்கப்பட்டுள்ள தண்ணீர் விவசாயத்திற்கு போதாது, கடைமடை வரை செல்லாது, 18,000 கன அடி தண்ணீர் திறக்க வேண்டும், அப்போது தான் விவசாயம் செய்ய முடியும் என்றும் பி.ஆர்.பாண்டியன் கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தொடர்ந்து பேசிய அவர், வருகிற 17-ம் தேதி காவிரி மேலாண்மை வாரிய கூட்டம் கூட இருக்கிறது. இதில் மேகதாது அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும் என்று கூறிய அவர், காவிரி மேலாண்மை  வாரியம் சட்டப்படியான செயல்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும். அதற்கான நடவடிக்கைகளில் தமிழக அரசு ஈடுபட வேண்டும் என்றார்.

Must Read : கேரளா தங்கம் கடத்தலில் பினராயி விஜயன், குடும்பத்தினருக்கு தொடர்பு... ஸ்வப்னோ சுரேஷ் அதிர்ச்சி தகவல்

மேலும், கர்நாடக அரசு சட்டத்திற்கு புறம்பாக காவிரி மேலாண்மை வாரியத்தின் கருத்துகளை ஏற்க மறுத்து, சதி திட்டம் தீட்டி வருகிறது. மேகதாது அணை கட்டினால் பெரும் பாதிப்பு ஏற்படும் எனவும் பி.ஆர்.பாண்டியன் கூறினார்.

Published by:Suresh V
First published:

Tags: Mekedatu dam, Mettur Dam, PR pandian, Salem