Home /News /salem /

திருமாவளவன் சுவர் விளம்பரம் வரைய எதிர்ப்பு.. விசிக புகார்.. பாமக எம்.எல்.ஏ மீது வழக்குப்பதிவு!

திருமாவளவன் சுவர் விளம்பரம் வரைய எதிர்ப்பு.. விசிக புகார்.. பாமக எம்.எல்.ஏ மீது வழக்குப்பதிவு!

விசிகவினர் ஆர்ப்பாட்டம்

விசிகவினர் ஆர்ப்பாட்டம்

திருமாவளவன் சுவர் விளம்பரம் வரைய பாமகவினர் எதிர்ப்பு மேட்டூர் எம்எல்ஏ சதாசிவம் மீது வழக்குப்பதிவு

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Salem, India
சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த கொளத்தூர் அருகே உள்ளது காவேரிபுரம் கிராமம். இங்கு மக்களவை உறுப்பினர் திருமாவளவனின் பிறந்த நாளை முன்னிட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக சுவர் விளம்பரம், கடந்த ஆகஸ்ட் மாதம் 13ம் தேதி எழுதப்பட்டது. அப்போது அதே பகுதியில் வசிக்கும் பாட்டாளி மக்கள் கட்சியை சார்ந்த சிலர் அங்கு வந்து, சுவர் எழுத்து எழுதுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, விசிகவினருடன் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

இதுதொடர்பாக வி.சி.க நிர்வாகி இளையராஜா என்பவர் கொளத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.  இதனை அடுத்து பா.ம.க வை சார்ந்த மூன்று பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். ஆனால் அவர்கள் கைது செய்யப்படவில்லை. அதன் பின்னர் அந்த சுவரெழுத்து மீது கருப்பு நிற ஆயில் பூசி அழிக்கப்பட்டது. இதனை அடுத்து, சுவரெழுத்து எழுத எதிர்ப்பு தெரிவித்து தகராறில் ஈடுபட்ட பாமகவினரை கைது செய்ய வலியுறுத்தி விசிகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



இந்த நிலையில் விசிக மாவட்ட பொறுப்பாளர் வசந்த் என்பவர் கடந்த 26ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் கொளத்தூர் காவல் நிலையத்தில் மேட்டூர் சட்ட மன்ற உறுப்பினர் சதாசிவம் மீது புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார்.

இதையும் வாசிக்க: ஒருவரையும் தப்பவிட மாட்டோம் - கள்ளக்குறிச்சி மாணவியின் தாயாருக்கு உறுதியளித்த முதலமைச்சர் ஸ்டாலின்

அதில் மேற்கண்ட நிகழ்வுகளின் தொடர்ச்சியாக கடந்த ஆகஸ்ட் 24 ஆம் தேதி கொளத்தூர் அருகே உள்ள கருங்கல்லூரில் உள்ள தனியார் திருமண மண்டபம் ஒன்றில்  மேட்டூர் எம்எல்ஏ சதாசிவம் தலைமையில் பாமக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றதாகவும் அதில் சதாசிவம் பேசும் போது  கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாகவும் தெரிவித்துள்ளார்.

 

எனவே சமூக நல்லினக்கத்திற்கு எதிராக, சாதி பிரிவினையைத் தூண்டி தமிழ்நாட்டில் கலவரத்தை உருவாக்க முயற்சி செய்யும் மேட்டூர் எம்எல்ஏ சதாசிவம் மீது வழக்கு பதிவு செய்து கைது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரியிருந்தார். இதனையடுத்து கொளத்தூர் காவல்துறையினர் எம்எல்ஏ சதாசிவம் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
Published by:Vijay R
First published:

Tags: PMK, Salem, VCK

அடுத்த செய்தி