ஹோம் /நியூஸ் /சேலம் /

எடப்பாடி பழனிசாமி காலில் விழுந்தது இதற்குதான்... பாமக எம்.எல்.ஏ கொடுத்த விளக்கம்!

எடப்பாடி பழனிசாமி காலில் விழுந்தது இதற்குதான்... பாமக எம்.எல்.ஏ கொடுத்த விளக்கம்!

எடப்பாடி பழனிசாமி காலில் விழுந்த பாமக எம்.எல்.ஏ அருள்

எடப்பாடி பழனிசாமி காலில் விழுந்த பாமக எம்.எல்.ஏ அருள்

சேலம் மாவட்டத்தில் மேடையிலேயே எடப்பாடி பழனிசாமி காலில் பாமக எம்.எல்.ஏ விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Salem, India

தன்னைவிட மூத்தவர் என்பதால், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி காலில் விழுந்து ஆசி பெற்றதாக பாமக எம்.எல்.ஏ. அருள் விளக்கம் அளித்துள்ளார்.

சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள் விளையாட்டு அரங்கத்தை திறந்து வைத்தார். அப்போது மேடைக்கு வந்த சேலம் மேற்கு தொகுதி பாமக சட்டமன்ற உறுப்பினர் அருள், எடப்பாடி பழனிசாமியின் காலில் விழுந்து வணங்கினார்.

இதையும் படிக்க :  2024 லோக்சபா தேர்தல்: திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யம்? - கமல் சொன்ன சூசக தகவல்!

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் மிகவும் வைரலானது. அதிமுகவினரையே ஆச்சரியத்தில் ஆழ்த்திய இந்த சம்பவம் தொடர்பாக எம்.எல்..ஏ. அருள் விளக்கம் அளித்துள்ளார்.

இது தொடர்பாக நியூஸ் 18 க்கு பேட்டியளித்த பாமக எம்.எல்.ஏ அருள், தன்னை விட ஒரு வயது மூத்தவராக இருந்தாலும் அவர்கள் காலில் விழுந்து ஆசி பெறுவது எனது பழக்கம். அந்த அடிப்படையில் என்னைவிட வயதில் மூத்தவர் என்ற காரணத்தினால் எதிர்க்கட்சி தலைவர் காலில் விழுந்து ஆசி பெற்றேன். இதில் தவறு ஏதும் இல்லை என்பதே என் கருத்து என தெரிவித்தார்.

First published:

Tags: ADMK, Edappadi Palaniswami, PMK, Salem