ஹோம் /நியூஸ் /Salem /

சேலத்தில் பிலிப்பைன்ஸ் நாட்டு பெண் ரயிலில் இருந்து தவறி விழுந்து மரணம் - காதல் கணவர் கண்முன்னே நிகழ்ந்த சோகம்

சேலத்தில் பிலிப்பைன்ஸ் நாட்டு பெண் ரயிலில் இருந்து தவறி விழுந்து மரணம் - காதல் கணவர் கண்முன்னே நிகழ்ந்த சோகம்

வெளிநாட்டு பெண் மரணம்

வெளிநாட்டு பெண் மரணம்

எர்ணாகுளம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் தனது காதல் கணவருடன் வந்த பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த பெண் ரயிலில் இருந்து விழுந்து இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

ஓமலூர் அருகே பெங்களூரில் இருந்து எர்ணாகுளம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் தனது காதல் கணவருடன் வந்த பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த பெண் கீழே விழுந்து உயிரிழந்த சம்பவத்தில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியைச் சேர்ந்தவர் ஹாரிஸ் (வயது 48). இவர் மருத்துவத்துறையில் பணியாற்றுவதாக கூறப்படுகிறது. இவர் வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக் மூலம் பிலிப்பைன்ஸ்  மணிலா பகுதியைச் சேர்ந்த ரைசல் (வயது 35) என்ற பெண்ணை கடந்த மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார்.  இதைத் தொடர்ந்து கடந்த 10 நாட்களுக்கு முன்பு பிலிப்பைன்ஸ் நாட்டில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூருக்கு வந்த அப்பெண் அவரது காதலருடன் பதிவுத்திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இதைத் தொடர்ந்து 10 நாட்களாக பெங்களூர் பகுதியில் குடும்பம் நடத்தி வந்த இவர்கள் தற்போது தனது கணவர் வீடான எர்ணாகுளம் செல்வதற்காக பெங்களூரில் இருந்து எர்ணாகுளம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் வந்துள்ளனர். அப்போது சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள காருவள்ளி ரயில் நிலையத்தை கடந்தவுடன் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த ரைசல் என்ற பெண் ரயில் படிக்கட்டில் நின்று தவறி விழுந்ததாக கூறப்படுகிறது.

Also Read: நாகதோஷம் நள்ளிரவு பூஜையில் பாலியல் தொல்லை.. கல்லூரி மாணவி மர்ம மரணத்தில் சிக்கிய சாமியார் - நடந்தது என்ன?

இதைத்தொடர்ந்து இவரது கணவர் அடுத்து வந்த ஓமலூர் ரயில் நிலையத்திற்குச் சென்று அங்கிருந்து இறங்கி மீண்டும் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த போது அவர் சுமார் 50 அடி பள்ளத்தில் விழுந்து உயிரிழந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து இதுகுறித்து அக்கம்பக்கத்தினர். தீவட்டிப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.சம்பவ இடத்திற்கு வந்த தீவட்டிப்பட்டி போலீசார் ரயிலில் இருந்து விழுந்து இறந்ததால்  இதுகுறித்து தர்மபுரி ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே சப்-இன்ஸ்பெக்டர் கோதண்டராமன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். தொடர்ந்து பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.  அவரது காதல் கணவரிடம் விசாரித்து வருகின்றனர்.  ரயிலில் இருந்து விழுந்து இறந்த பெண் வெளி நாட்டைச் சேர்ந்தவர் என்பதால் காதலித்து திருமணம் செய்து கொண்டு கணவர் வீட்டுக்கு சென்றபோது  அவரே தவறி விழுந்தாரா? அல்லது தள்ளிவிட்டு கொலை செய்யப்பட்டாரா? என பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.  வெளி நாட்டைச் சேர்ந்த ஒரு பெண் ரயிலில் இருந்து விழுந்து இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

First published:

Tags: Salem, Train