ஹோம் /நியூஸ் /சேலம் /

50 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பிய அச்சம்பட்டி ஏரி.. கிடா வெட்டி தண்ணீரை வரவேற்ற மக்கள்!

50 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பிய அச்சம்பட்டி ஏரி.. கிடா வெட்டி தண்ணீரை வரவேற்ற மக்கள்!

தண்ணீரை மலர் தூவி வரவேற்ற மக்கள்

தண்ணீரை மலர் தூவி வரவேற்ற மக்கள்

86 ஏக்கர் பரப்பளவு கொண்ட அச்சம்பட்டி ஏரி 50 ஆண்டுகளுக்குப் பிறகு நிரம்பியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Salem | Salem

எடப்பாடியில் 50 ஆண்டுகளுக்குப் பிறகு நிரம்பிய அச்சம்பட்டி ஏரியால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

சேலம் மாவட்டம் எடப்பாடி பகுதியில் கடந்த சில நாட்களாகவே பரவலாக கன மழை பெய்து வந்ததையொட்டி எடப்பாடி பகுதியை சுற்றியுள்ள ஏரிகள் நிரம்பி வழிகிறது.

அதைத்தொடர்ந்து எடப்பாடி அடுத்த வெள்ளநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள 86 ஏக்கர் பரப்பளவு கொண்ட அச்சம்பட்டி ஏரி 50 ஆண்டுகளுக்குப் பிறகு நிரம்பி தற்போது தண்ணீர் வெளியேறுகிறது.

ALSO READ | முத்துமலை முருகன் கோயிலில் நடிகர் யோகிபாபு சாமி தரிசனம்..

இதனால் அச்சம்பட்டி சுற்றியுள்ள சுமார் 60க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்கள் பயன்பெறுகிறது. 50 ஆண்டுகளுக்குப் பிறகு ஏரி நிரம்பி தண்ணீர் வெளியேறி வருவதால், அப்பகுதி மக்கள் கிடாவெட்டி, பூஜை செய்ததோடு மட்டும் இல்லாமல் தண்ணீரை மலர் தூவி மகிழ்ச்சியாக வரவேற்றனர்.

Published by:Anupriyam K
First published:

Tags: Lake, Salem