Home /News /salem /

சேலம் ஆவின் பால் பண்ணையின் முன்பு 2வது நாளாக காத்திருப்பு போராட்டம்...

சேலம் ஆவின் பால் பண்ணையின் முன்பு 2வது நாளாக காத்திருப்பு போராட்டம்...

சேலம் ஆவின் பால் பண்ணையின் முன்பு 2வது நாளாக காத்திருப்பு போராட்டம்...

சேலம் ஆவின் பால் பண்ணையின் முன்பு 2வது நாளாக காத்திருப்பு போராட்டம்...

Salem | சேலம் ஆவின் பால் பண்ணைக்கு நிலம் கொடுத்து பாதிக்கப்பட்ட பொதுமக்கள், பட்டா கேட்டு இரண்டாவது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். ஆவின் பால் பண்ணை நுழைவு வாயில் முன்பு இரவு முழுவதும் தங்கி, அடுப்பு, சமையல் பாத்திரங்களோடு போராட்டம் தொடர்கிறது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Salem, India
சேலம் -இரும்பாலை சாலையில் சித்தனூரில் ஆவின் பால்பண்ணை செயல்பட்டு வருகிறது. இதற்காக கடந்த 1979 ம்ஆண்டு நிலம் ஆர்ஜிதம் செய்யப்பட்டது. ஆவின்பால் பண்ணைக்கு 32 குடும்பத்தினர் நிலம் கொடுத்தனர் . அவர்களுக்கு குடியிருப்பதற்காக வீட்டு மனை கொடுப்பது என ஒப்பந்தம் செய்யப்பட்டது . அதன்படி அவர்களுக்கு வீட்டுமனை கொடுக்கப்பட்டது . ஆனால் அதற்கான பட்டா மற்றும் பத்திரம் செய்து கொடுக்கவில்லை .

இதையடுத்து, ஆவின் பால் பண்ணைக்கு நிலம் கொடுத்து பாதிக்கப்பட்டோர் ஒன்று திரண்டு,  பட்டா வழங்க வேண்டும் என கோரி, சம்பந்தப்பட்ட அதிகாரிகளை சந்தித்து பலமுறை கோரிக்கை வைத்துள்ளனர் . ஆனால் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை என தெரிகிறது.

இந்த நிலையில் நேற்று பாதிக்கப்பட்ட குடும்பத்தை சேர்ந்த பெண்கள், குழந்தைகள் உள்பட சுமார் ஐம்பது பேர், உழவு கருவியான ஏர் கலப்பையுடன் வந்து ஆவின் பால் பண்ணை நுழைவு வாயில் அருகில் அமர்ந்து நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து ஆவின் அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். சென்னை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக் கப்பட்டுள்ளதாகவும் , அவர்கள் அனுமதி கிடைத்தவுடன் பட்டா வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர் . ஆனால் 40 ஆண்டுகளுக்கும் மேலாக தங்களுக்கு கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை , மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் உத்தரவாதம் கொடுக்கும் வரை இங்கேயே அமர்ந்து இருக்கிறோம் என அவர்கள் தெரிவித்தனர் .

இதையடுத்து கேஸ் சிலிண்டர், அடுப்பு, சமையல் பாத்திரங்கள் ஆகியவைகளை  கொண்டு வந்து அங்கேயே சமைத்து சாப்பிட்டனர் . இரவு முழுவதும் இங்கேயே தங்கியுள்ள மக்கள் இரண்டாவது நாளாகவும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Also see... தமிழகத்தின் 17வது பறவைகள் சரணாலயமானது திருப்பூர் நஞ்சராயன் குளம்...

இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறும் போது, இதுவரை எங்களுக்கு பட்டா வழங்காததால், அரசு வழங்கும் இலவச வீடு உள்ளிட்ட நல திட்டங்களை பெற முடியவில்லை. மின் இணைப்பு கிடைக்கவில்லை. வாரிசுகளுக்கு பாகப்பிரிவினை செய்ய முடியவில்லை. யாரும் திருமணத்திற்கு பெண் கொடுக்க மறுக்கிறார்கள் என வேதனை தெரிவித்தனர்.
Published by:Vaijayanthi S
First published:

Tags: Aavin, Protest, Salem

அடுத்த செய்தி