Home /News /salem /

விடுமுறையில் ஊர் சுற்றியதை பெற்றோர் தட்டிக்கேட்டதால் மாணவிகள் தற்கொலை முயற்சி

விடுமுறையில் ஊர் சுற்றியதை பெற்றோர் தட்டிக்கேட்டதால் மாணவிகள் தற்கொலை முயற்சி

மாணவிகள்  தற்கொலை முயற்சி

மாணவிகள் தற்கொலை முயற்சி

பெற்றோர்கள் திட்டியதால் மாணவிகள் பயந்து  தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். தற்போது மாணவிகளுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Salem, India
    சேலத்தில் விடுமுறை நாட்களில் வீட்டிற்கு செல்லாமல் நண்பர்களுடன் ஊர் சுற்றிய மாணவிகளை பெற்றோர்கள் திட்டியதால் மனமுடைந்து 4 மாணவிகள்  தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர்.

    சேலம் மாவட்டம் வாழப்பாடி கிராமத்தில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெண்கள் மேல்நிலைப்  பள்ளியைச் சேர்ந்த 10ம் வகுப்பு மாணவிகள் 4 பேர் புதுப்பாளையம் அரசு ஆதிதிராவிடர் நல விடுதியில் தங்கி படித்து வருகின்றனர்.  இந்த நிலையில் கடந்த 3 நாட்கள் விடுமுறை காரணமாக மாணவிகள் அவரவர் வீட்டுக்கு செல்வதாக விடுதி வார்டனிடம் தெரிவித்துவிட்டு வீட்டுக்கு செல்லாமல் தனது நண்பர்கள் வீட்டுக்கு சென்றுள்ளனர். மேலும் நேற்று பள்ளிக்குச் செல்லாமல் கோயிலுக்கு சென்றதாகவும்  கூறப்படுகிறது. இந்த தகவல் பெற்றோர்களுக்கு தெரியவந்ததால், மாணவிகளை அவர்களது பெற்றோர்கள்  கண்டித்துள்ளனர்.

    இதனால் மனமுடைந்த மாணவிகள் நான்கு பேரும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து உடனடியாக மாணவிகள் 4 பேருக்கும் வாழப்பாடி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பிறகு மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு குமாரமங்கலம் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.  மாணவிகள் தற்கொலை முயற்சி  குறித்து வாழப்பாடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ALSO READ  | ஸ்வாதி கொலை வழக்கு: ‘ராம்குமார் கழுத்தை போலீஸ்தான் அறுத்திருக்கவேண்டும்’ - திருமாவளவன் எம்பி

    இது குறித்த தகவல் அறிந்த மாவட்ட ஆட்சியர் கார்மேகம் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபினவ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மாணவிகளை நேரில் சந்தித்து  ஆறுதல் தெரிவித்தனர். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கார்மேகம் கூறும்போது பெற்றோர்களுக்கு தெரியாமல் மாணவிகள் நண்பர்களின் வீட்டிற்கும், கோவிலுக்கும் சென்றுள்ளனர். இதனால் பெற்றோர்கள் திட்டியதால் மாணவிகள் பயந்து  தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் மாணவிகளுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது மாணவிகள் நன்றாக உள்ளனர். தொடர்ந்து பள்ளி மாணவிகளுக்கு மனநல ஆலோசனைகள் வழங்கப்படும் என தெரிவித்தார்.

    மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும். மாநில உதவிமையம்: 104 ; சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Salem

    அடுத்த செய்தி