ஹோம் /நியூஸ் /சேலம் /

2 ஆண்டாக காதல்... திருமணத்துக்கு மறுப்பு... சிறுமியுடன் இளைஞர் தற்கொலை

2 ஆண்டாக காதல்... திருமணத்துக்கு மறுப்பு... சிறுமியுடன் இளைஞர் தற்கொலை

தற்கொலை செய்து கொண்ட காதல் ஜோடி

தற்கொலை செய்து கொண்ட காதல் ஜோடி

salem Lovers suicide | கோபி சிறுமியின்  வீட்டிற்கு சென்று பெண் கேட்டுள்ளார். ஆனால்  பெற்றோர் “18 வயது முடிந்தவுடன் பெண் கொடுக்கிறோம்” என தெரிவித்துள்ளனர். 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Salem, India

மேட்டூர் அருகே விஷ மாத்திரையை சாப்பிட்டு காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த நங்கவள்ளி அருகே உள்ள  செம்மண் காட்டுவளவு பகுதியை சேர்ந்தவர் கோபி(26). இவர் அப்பகுதியில் விசைத்தறி தொழில்  செய்து வருகிறார். இதே பகுதியை சேர்ந்தவரின்  பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் 17 வயது சிறுமியை 2 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கோபி சிறுமியின்  வீட்டிற்கு சென்று பெண் கேட்டுள்ளார். ஆனால்  பெற்றோர் “18 வயது முடிந்தவுடன் பெண் கொடுக்கிறோம்” என தெரிவித்துள்ளனர். மேலும் சிறுமியை பெற்றோர்  மூன்று மாதங்களாக பள்ளிக்கு  அனுப்பவில்லை.

இதையும் படிங்க : அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற வந்தவர் கொலை... வெளியான அதிர்ச்சி காட்சிகள்.. 4 பேர் கைது

இந்நிலையில், நேற்று மாலை 5 மணிக்கு சிறுமி மற்றும் கோபி ஆகிய இருவரும்  தென்னை மரத்துக்கு வைக்கும் அலுமினியம் பாஸ்பேட் மாத்திரைகளை சாப்பிட்டு உள்ளனர்.

இச்சம்பவம் தெரிந்து  உறவினர்கள், இருவரையும் மீட்டு சேலம் தனியார்  மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். சிகிச்சையில் இருந்து வந்த இருவரும் இன்று அதிகாலை பரிதாபமாக உயிரிழந்தனர். இதுதொடர்பாக நங்கவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Published by:Karthi K
First published:

Tags: Crime News, Lovers, Salem, Suicide