ஹோம் /நியூஸ் /சேலம் /

கல்லூரி மாணவி குளிப்பதை வீடியோ எடுத்த பெயிண்டர் கைது

கல்லூரி மாணவி குளிப்பதை வீடியோ எடுத்த பெயிண்டர் கைது

கைதானவர்

கைதானவர்

Salem | சேலத்தில் கல்லூரி மாணவி குளிப்பதை செல்போனில் வீடியோ எடுத்த பெயிண்டரை காவல்துறையினர் கைது செய்தனர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Salem, India

  சேலம் அன்னதானப்பட்டி பகுதியை சேர்ந்த பெயிண்டர் தேவாஸ்(40) நெத்திமேடு பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு பெயிண்ட் அடிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது பக்கத்து வீட்டிலிருந்த கல்லூரி மாணவி குளிப்பதை பார்த்த தேவாஸ் செல்போனில் வீடியோவும் எடுத்துள்ளார்.

  இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த மாணவி கூச்சலிடவே மாணவியின் தந்தை பெயிண்டரை பிடித்து காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளார்.

  இது தொடர்பான புகாரின் அடிப்படையில் சேலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். உடனே அங்கு பிடித்து வைக்கப்பட்டிருந்த தேவாஸ்-ஐ கைது செய்தனர்.

  Also see... சென்னையில் இரு தரப்பினர் மோதிக் கொண்டதில் ரவுடி வெட்டிக் கொலை

  அத்துடன் அந்த பெயிண்டர் மீது பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து  நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

  செய்தியாளர்: திருமலை தமிழ்மணி, சேலம்

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Arrested, College student, Crime News, Salem, Sexual harrasment, Video