Home /News /salem /

ஒன்றரை வயது குழந்தை தண்ணீர் தொட்டியில் விழுந்து உயிரிழப்பு.. சேலத்தில் துயர சம்பவம்

ஒன்றரை வயது குழந்தை தண்ணீர் தொட்டியில் விழுந்து உயிரிழப்பு.. சேலத்தில் துயர சம்பவம்

சிறுமி உயிரிழப்பு

சிறுமி உயிரிழப்பு

Salem | கெங்கவல்லி அருகே வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த ஒன்றரை வயது குழந்தை வீட்டின் முன்பு  இருந்த தண்ணீர் தொட்டியல்  விழுந்து நீரில் மூழ்கி பரிதாபமாக  உயிரிழந்தது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Salem, India
சேலம்  மாவட்டம்  கெங்கவல்லி  அருகே  கிருஷ்ணாபுரம்  எம்ஜுஆர்,  நகர் பகுதியை சேர்ந்தவர் கூலித் தொழிலாளி ராம்குமார். இவரது  மனைவி புஷ்பலதா. இந்த தம்பதிக்கு  ஓன்றரை வயதில் ருத்ரா என்கிற பெண் குழந்தை உள்ளது.இதனிடையே ராம்குமார் காலையில் வேலைக்கு சென்றுவிட்ட நிலையில் வீட்டில் தாய் புஷ்பலதா மற்றும் அவரது மாமியார் இருந்துள்ளனர்.

இந்த நிலையில் வீட்டின் வளாகத்தில் விளையாடி கொண்டிருந்த குழந்தை ருத்ரா காணமல் போனதால் பதறிப்போன அவரது தாய் மற்றும் உறவினர்கள் குழந்தையை அக்கம்பக்கத்தில் தேடி பார்த்துள்ளனர். அப்போது குழந்தை வீட்டின் முன்பு இருந்த திறந்த வெளி தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளது தெரியவந்தது.

இச்சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற கெங்கவல்லி போலீசார் தண்ணீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்த ஒன்றரை வயது குழந்தை ருத்ராவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆத்தூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, குழந்தையின் பெற்றோரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்ரனர்.

Also see... பிரபல யூடியூப்பர் மீது வழக்கு பதிவு செய்த கோவை போலீஸ்

பெற்றோரின் அலட்சியத்தால் ஒன்றரை வயது குழந்தை வீட்டின் முன்பு இருந்த தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து நீரில் மூழ்கி பலியான இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Published by:Vaijayanthi S
First published:

Tags: Child, Crime News, Salem

அடுத்த செய்தி