ஹோம் /நியூஸ் /சேலம் /

50 ரூபாய்க்கு 5 வகை இறைச்சியுடன் விருந்து... பி.இ. முடிச்சுட்டு ஹோட்டல் பிசினஸ்.. சேலத்தைக் கலக்கும் ரோட்டுக்கடை!

50 ரூபாய்க்கு 5 வகை இறைச்சியுடன் விருந்து... பி.இ. முடிச்சுட்டு ஹோட்டல் பிசினஸ்.. சேலத்தைக் கலக்கும் ரோட்டுக்கடை!

50 ரூபாயில் 5 வகை இறைச்சியுடன் அசைவ விருந்து

50 ரூபாயில் 5 வகை இறைச்சியுடன் அசைவ விருந்து

ஐம்பது ரூபாய்க்கு சாப்பாட்டுடன் கோழிக்கறி, நாட்டுக்கோழி கறி, தலைக்கறி, போட்டி, ஈரல் ஆகியவை கொடுப்பதால் மாற்றுத்திறனாளி இளைஞரின் சாலையோர உணவகத்திற்கு ஆதரவு குவிந்து வருகிறது. 

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Salem, India

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள முத்துநாயக்கன்பட்டி பகுதியை சார்ந்தவர் ராஜா (வயது 40). மாற்றுத் திறனாளியான இவர், பொறியியல் (பி.இ) படித்து முடித்துள்ளார். பல்வேறு தனியார் நிறுவனங்களில் வேலை பார்த்த பிறகு முத்துநாயக்கன்பட்டியில் செல்போன் சர்வீஸ் கடை நடத்தி வந்தார் . ஆனால் போதிய வருமானம் கிடைக்கவில்லை. கொரோனா காலத்தில் இவரது தொழில் மேலும் தொய்வடைந்தது.

இதனை அடுத்து முத்துநாயக்கன்பட்டி அருகே சாலையோர உணவகம் ஒன்றை தொடங்கினார். இந்த உணவகம் பகல் 12 மணி முதல் மாலை வரை மட்டுமே நடத்தப்படுகிறது. ஐம்பது ரூபாய்க்கு அளவில்லா சாப்பாட்டுடன், கோழிக்கறி, நாட்டுக்கோழி கறி, தலைக்கறி, போட்டி, ஈரல் ஆகியவை கொடுக்கப்படுகிறது.  இரண்டு மணி நேரத்தில் சாப்பாடு முழுமையாக விற்று தீர்ந்துவிடுகிறது.  சாப்பாடு தீர்ந்த பிறகு வரும் வாடிக்கையாளர்கள் ஏமாற்றத்தை போக்கும் வகையில்,  பணியாரம், ரத்த பொறியல், மற்றும் கறி வகைகள் குறைந்த விலையில் விற்கப்படுகிறது.

இந்த சாலையோர உணவகத்திற்கு  முத்துநாயக்கன்பட்டி, ஓமலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் வசிக்கும் கூலித் தொழிலாளர்கள் பலரும் வந்து ஐம்பது ரூபாய் அசைவ விருந்தை சாப்பிட்டு மகிழ்வதோடு,  ராஜாவை பாராட்டி செல்கிறார்கள் . தற்போது இந்த கடை பிரபலமாகிவிட்டதால் வெளி ஊர்களில் இருந்தும் பலர் வந்து சாப்பிட்டு செல்கிறார்கள்.

பிரபலமான பெரிய உணவகங்களில் அசைவ உணவு சாப்பிட வேண்டுமானால், குறைந்தபட்சம் 300 ரூபாய்க்கு மேல் செலவாகும் சூழலில், இங்கு ஐம்பதே ரூபாய்க்கு ஐந்து வகையான இறைச்சிகளுடன் சாப்பிடுவது திருப்தி அளிப்பதாகவும், அதே நேரத்தில் நல்ல சுவையுடன் இருப்பதாகவும், இங்கு வரும் வாடிக்கையாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

வேலைக்கு ஆட்கள் ஏதும் வைக்காமல், எனது மனைவி, அம்மா  உள்ளிட்ட எனது குடும்ப உறுப்பினர்களே சமைத்து விற்பதால் இவ்வாறு ஐம்பது ரூபாய்க்கு ஐந்து வகை கறி கொடுப்பது சாத்தியமாகிறது என்று கூறும் உணவக உரிமையாளர் ராஜா,  ஹோட்டல் துவங்கிய போது, முதலில் சற்று  நட்டம் தான் ஏற்பட்டது.

Also see... அரை கிலோ தங்கம்.. 5 கிலோ வெள்ளி.. திருத்தணி முருகன் கோயிலில் உண்டியல் காணிக்கை!

ஆனாலும் வாடிக்கையாளர்களுக்கு திருப்தியாக சாப்பாடு கொடுக்கும் மன நிறைவோடு தொடர்ந்து நடத்தி வந்தேன். தற்போது அதிக அளவு வாடிக்கையாளர்கள் வருவதால், போதுமான லாபம் கிடைக்கிறது என்றார். தொடர்ந்து எங்களுக்கு ஆதரவு அதிகரித்து வருவதால் மேலும் ஓட்டலை திறம்பட நடத்த முடிவு செய்திருக்கிறேன் என்றும் அவர் தெரிவித்தார்.

Published by:Vaijayanthi S
First published:

Tags: Non Vegetarian, Salem