தமிழகத்தில் உள்ளாட்சிகளில் காலியாக உள்ள பதவிக்கான தேர்தலில், சேலத்தில் இரட்டை இலை சின்னத்தில் யாரும் பேட்டியிடவில்லை. அதிமுக கிளை செயலாளர் சுயேட்சை வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
உள்ளாட்சியில் காலியாக உள்ள பதவிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 09-07-2022 அன்று வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அதன்படி சேலம் மாவட்டத்தில் சேலம் ஒன்றியத்திற்கு உட்பட்ட 8வது வார்டு உறுப்பினர் (ஒன்றிய கவுன்சிலர்) பதவிக்கு தேர்தல் நடைபெற உள்ளது.
இதற்கான வேட்புமனு தாக்கல் 20-07-2022 அன்று காலை தொடங்கி, 27-06-2022 நேற்று மாலை 5 மணியுடன் நிறைவடைந்தது.
நேற்று ஒரே நாளில் 17 பேர் உட்பட மொத்தம் 21 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இன்று வேட்புமனுக்கள் மீதான ஆய்வு நடைபெறுகிறது. 30-06-2022 அன்று பிற்பகல் 3 மணி வரை வேட்புமனுக்களை திரும்பப் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த 8-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு திமுக சார்பில் முருகன் என்பவரும், அமமுக சார்பில் லோகநாதன் என்பவரும், பாமக சார்பில் சகாதேவன் என்பவரும் போட்டியிடுகிறார்கள்.
இதில் அதிமுக சார்பில் போட்டியிடுவதற்கான வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படவில்லை எனக் கூறப்படுகின்றது. அதே சமயம், நேற்று மாலை அதிமுக கிளை செயலாளராக உள்ள வெங்கடேஷ் என்பவர் சுயேச்சையாக வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், ஓபிஎஸ், இபிஎஸ் ஆகிய இரு அணிகளாக கட்சியினர் பிரிந்து இருப்பதால், சேலம் ஒன்றியத்தில் பேட்டியிடும் அதிமுக கிளை செயலாளரான வெங்கடேஷ்-க்கு இரட்டை இலை சின்னம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
Must Read : நீ என்ன ஜெயக்குமார் ஆளா எனக் கூறி அதிமுக தொண்டர் வாயில் குத்து.. ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மீது போலீஸ் வழக்குப்பதிவு
இந்நிலையில், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் கூறும்போது, கட்சி சின்னம் பெறுவதற்கான படிவத்தை கொடுக்க கால அவகாசம் இருப்பதாக தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
உங்கள் நகரத்திலிருந்து(சேலம்)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.