ஹோம் /நியூஸ் /சேலம் /

திருமணமான 10 நாளில் காதலனுடன் புதுப்பெண் ஓட்டம்.. காதலனின் வீட்டை சூறையாடி தீ வைத்த உறவினர்கள் - சேலத்தில் பகீர் சம்பவம்

திருமணமான 10 நாளில் காதலனுடன் புதுப்பெண் ஓட்டம்.. காதலனின் வீட்டை சூறையாடி தீ வைத்த உறவினர்கள் - சேலத்தில் பகீர் சம்பவம்

சேலம் சம்பவம்

சேலம் சம்பவம்

Salem News : சேலம் மாவட்டத்தில் திருமணமான புதுப்பெண் 10 நாளில் காதலனுடன் ஓட்டம் பிடித்ததால் காதலனின் வீட்டை உறவினர்கள் சூறையாடியுள்ளனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Salem, India

சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்த காடையாம்பட்டி அருகே மரக்கோட்டை ஊராட்சியில் வசிக்கும் மாரிமுத்து மகன் அஜித்குமாரும் (வயது 23) அவரது வீட்டின் அருகே வசிக்கும் மாணிக்கம் மகள் பூர்ணிமாவும் (வயது 20) சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து இருவரின் காதல் விவகாரம் பூர்ணிமாவின் பெற்றோருக்கு தெரிந்து, காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு,  பூர்ணிமாவுக்கு அறிவுறை வழங்கி,  கடந்த 10 நாட்களுக்கு முன்பு அவரது அத்தை மகனுக்கு திருமணம் செய்து வைத்தனர்.

இதனை அறிந்த காதலன் அஜித்குமார் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில் காதலி பூர்ணிமா தனது காதலன் தற்கொலைக்கு முயன்ற காரணத்தினால் அவர் மீது உள்ள காதலால் தனது கணவருடன் தினமும் சண்டையிட்டு வந்ததாக கூறப்படுகின்றது.

இந்த நிலையில் அஜித்குமார் மற்றும் பூர்ணிமா ஆகிய இருவரும் ஞாயிற்றுக் கிழமை இரவு வீட்டை விட்டு வெளியேறி தலைமறைவாகினர்.  இந்த தகவலை அறிந்த பெண் வீட்டார் ஆத்திரத்தில் திங்கட் கிழமை அதிகாலை காதலனின் இரண்டு  வீடுகளை அடித்து நொறுக்கினர். பின்னர் வீட்டின் அருகே நிறுத்தியிருந்த மினிலாரி, குடிநீர் டேங்க், வைக்கோல்போர் உள்ளிட்ட பல லட்சம் மதிப்பிலான பொருட்களை தீயிலிட்டு கொளுத்தியுள்ளனர்.

மேலும் அங்கிருந்த டிராக்டரின் இரண்டு சக்கரத்தினை தீயிட்டு கொளுத்தி  அடித்து நொறுக்கிய பின்னர் அங்கிருந்து பெண்ணின் உறவினர்கள் சென்றனர்.  இதில் அஜித்குமாரின் தாயார் தங்கமணிக்கு (வயது 42) லேசான காயம் ஏற்பட்டுள்ளது. இதையறிந்த தீவட்டிப்பட்டி போலீசார் விரைந்து சென்று காடையாம்பட்டி தீயணைப்பு வீரர்கள் மூலம் மினி லாரியில் எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்து சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர்.

Also Read: வீட்டில் மர்மமான முறையில் இளம்பெண் மரணம் - சேலத்தில் அதிர்ச்சி சம்பவம்

சொத்தை சேதப்படுத்தியது தொடர்பான இந்த சம்பவம் குறித்து அஜித்குமாரின் தாயார் தங்கமணி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதுதொடர்பாக  பூர்ணிமாவின் தந்தை அப்பு (எ) மாணிக்கம் (வயது 45), ராஜா (எ) சுப்பிரமணி (வயது 25),  கணபதி (வயது 32), ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Published by:Ramprasath H
First published:

Tags: Crime News, Lovers, Salem, Tamil News