ஹோம் /நியூஸ் /சேலம் /

புதுப்பொலிவு பெறும் சேலம் மார்டன் தியேட்டர்ஸ் நுழைவு வாயில்..

புதுப்பொலிவு பெறும் சேலம் மார்டன் தியேட்டர்ஸ் நுழைவு வாயில்..

 மாடர்ன் தியேட்டஸ்

மாடர்ன் தியேட்டஸ்

Modern theatres | முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர், கருணாநிதி, ஜானகி,  என்.டி.ராமராவ் ஆகியோர் இந்த மாடர்ன் தியேட்டரில் நடித்திருந்தனர்.

  • Local18
  • 2 minute read
  • Last Updated :
  • Salem, India

சேலத்தில் இருந்து ஏற்காடு செல்லும் வழியில் கோரிமேடு பகுதியில் தி மாடர்ன் தியேட்டர்ஸ் என்ற திரைப்பட படப்பிடிப்பு அரங்கம் இருந்தது. மாடர்ன் தியேட்டர்ஸ் 45 வருட காலம் திரைப்படங்களை உருவாக்கிய தயாரிப்பு நிறுவனம் ஆகும்.  1932 ஆம் ஆண்டு ஒருங்கிணைந்த சேலம் மாவட்டத்தில் இருந்த திருச்செங்கோடு  பகுதியை சார்ந்த டி.ஆர்.சுந்தரம் மற்றும் அவரது நண்பர்கள் இணைந்து நல்லதங்காள் உள்ளிட்ட சில படங்களை தயாரித்தனர்.

அப்போது சேலத்தில் சினிமா படப்பிடிப்புக்கான ஸ்டுடியோ தனியாக இல்லை. இதனால் சென்னை, ஹைதராபாத் உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு சென்று படபிடிப்பு நடத்தி வந்துள்ளனர். இதனால் பயண நேரம், பயண செலவு ஆகியவற்றை குறைக்க முடிவு செய்துள்ளனர்.

இதனைடுத்து டி .ஆர்.சுந்தரம் 1935 ஆம் ஆண்டு கோரிமேடு பகுதியில் சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் மாடர்ன் தியேட்டர்ஸ் என்ற படப்பிடிப்பு நிறுவனத்தை தொடங்கினார். தென்னிந்தியா அளவில் பிரபலமான இந்த நிறுவனத்தில் ஒளிப்பதிவு,  படக்கோர்வை,  டப்பிங், இசைக்கோர்வை, பிரிவியூ தியேட்டர் என பல வசதிகளும் இருந்துள்ளது.

பேசும் படங்கள், முதல் இரட்டை வேட படங்கள், போன்ற பல்வேறு படங்களை இந்த நிறுவனம் தயாரித்திருந்தது. இது மட்டுமல்லாமல் முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர்,  கருணாநிதி, ஜானகி,  என்.டி.ராமராவ் ஆகியோர் இந்த மாடர்ன் தியேட்டரில் நடித்திருந்தனர்.

அதே போல் கவிஞர் கண்ணதாசன் உள்ளிட்ட பல பாடலாசிரியர்கள், ஒளிப்பதிவாளர்கள் சினிமா படப்பிடிப்புக்கு தேவையான கலைஞர்கள் என ஏராளமானோர் மாடர்ன் தியேட்டரில் உருவாகினர்.

பின்னாளில் இந்த நிறுவனம் தயாரிப்பு பணியை நிறுத்தி கொண்டது. அந்த இடத்தில் தற்போது ஏராளமான வீடுகள் கட்டப்பட்டுவிட்டன. தற்போது இந்த நிறுவனம் இல்லை என்றாலும் நிறுவனத்தின் நுழைவு வாயிலில் தி மாடர்ன் தியேட்டர்ஸ் என்ற எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட நுழைவு வளைவு மட்டும் அப்படியே உள்ளது. இந்த எஞ்சிய அடையாளத்தை சுற்றுலா பயணிகள் மற்றும் சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் பார்த்து செல்கின்றனர்.

Also see... திருப்பதியில் மகள் ஐஸ்வர்யா உடன் ஏழுமலையானை வழிபட்டார் ரஜினிகாந்த்...

இந்த இடம்  தற்போது வர்மா கன்ஸ்ட்ரக்சன் என்ற நிறுவனத்தின் வசம் உள்ளது. இந்த நுழைவு வாயில் அமைத்து பல வருடங்கள் ஆகிவிட்டதால்,  தற்போது தூய்மை செய்து புதுப்பொலிவு பெற செய்யும் வகையில்  முடிவு செய்து அதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளது வர்மா கன்ஸ்ட்ரக்சன். தற்போது உள்ள நுழைவு வாயில் புது பொலிவு பெற செய்து அருகில் பூங்கா அமைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

First published:

Tags: Salem, Theatre