ஹோம் /நியூஸ் /சேலம் /

ரூ.10க்கு மோடி வாட்டர் பாட்டில்... சேலத்தில் விற்பனை தொடக்கம்...

ரூ.10க்கு மோடி வாட்டர் பாட்டில்... சேலத்தில் விற்பனை தொடக்கம்...

மோடி வாட்டர் பாட்டில்

மோடி வாட்டர் பாட்டில்

Salem | சேலத்தில் பிரதமர் மோடி தண்ணீர் பாட்டில் 10 ரூபாய்க்கு விற்பனை தொடக்கம். அரசு பேருந்து பயணிகள் மற்றும் வாகன ஒட்டிகளுக்கு இலவசமாக பாஜகவினர் தண்ணீர் பாட்டில் வழங்கினர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Salem, India

  சேலத்தில் 10 ரூபாய்க்கு ஒரு லிட்டர் குடிநீர் பாட்டிலை அறிமுகம் செய்து விற்பனையை மாவட்ட பாஜகவினர் தொடங்கி வைத்தனர்.

  பொதுமக்களுக்கு மலிவு விலையில் சுகாதாரமான தண்ணீர் பாட்டில் கிடைக்க வேண்டும் என்ற முயற்சியில் பாஜக சார்பில் பாரத பிரதமர் நரேந்திர மோடி பெயரில் 1 லிட்டர் தண்ணீர் பாட்டில் 10 ரூபாய்க்கு வழங்கும் பணி இன்று சேலம் அம்மாபேட்டை பகுதியில் தொடங்கியது.

  இதனை சேலம் மாநகர மாவட்ட தலைவர் சுரேஷ் பாபு துவக்கி வைத்து தண்ணீர் பாட்டிலை வழங்கினார். தொடர்ந்து அவ்வழியாக வந்த அரசு பேருந்து மற்றும் தனியார் பேருந்துகளில் இருந்த பயணிகள் மற்றும் வாகன ஒட்டிகளுக்கு இலவசமாக பிரதமர் மோடி தண்ணீர் பாட்டில்களை வழங்கினார்.

  Also see...உலகப்புகழ்பெற்ற குலசை தசரா திருவிழா!கண்கவரும் படங்கள்..

  தொடர்ந்து சேலத்தில் 20க்கும் மேற்பட்ட இடங்களில் பத்து ரூபாய் தண்ணீர் பாட்டில் விற்பனை மையங்கள் திறக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பாஜகவினர் தெரிவித்தனர்.

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Drinking water, Modi, PM Modi, Salem