முகப்பு /செய்தி /சேலம் / “ஓபிஎஸ் - இபிஎஸ் மாதிரி இருக்காதீங்க..” மணமக்களுக்கு அட்வைஸ் செய்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்..

“ஓபிஎஸ் - இபிஎஸ் மாதிரி இருக்காதீங்க..” மணமக்களுக்கு அட்வைஸ் செய்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்..

ஓபிஎஸ், இபிஎஸ், உதயநிதி ஸ்டாலின்

ஓபிஎஸ், இபிஎஸ், உதயநிதி ஸ்டாலின்

Minister Udhayanidhi Stalin : சேலம் மேற்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் இல்ல திருமண விழாவில் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Salem, India

சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே உள்ள நடுவனேரியில் மேற்கு மாவட்ட திமுக இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் மணிகண்டன் இல்ல திருமண விழா இன்று காலை நடந்தது. இதில் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று திருமணத்தை நடத்தி வைத்தார்.

பின்னர் அவர் பேசுகையில், “மாநாடு என்றாலே நேரு என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து பாராட்டியிருந்தார். அந்த அளவிற்கு பணியாற்ற கூடியவர். கடந்த சட்டமன்ற தேர்தலில் சேலம் மாவட்டத்தில் ஒரே ஒரு இடத்தில் மட்டும் திமுக வெற்றி பெற்றதால் பொறுப்பு அமைச்சராக நேரு நியமிக்கப்பட்டார். தற்போது ஈரோடு கிழக்கு  தொகுதி இடை தேர்தலுக்கும் பொறுப்பாளராக நேரு நியமிக்கப்பட்டுள்ளார்.  நிச்சயம் வெற்றி பெற்று தருவார்.

சட்ட மன்றத்தில் மிகப்பெரிய வெற்றியை பொதுமக்கள் பெற்று தந்தீர்கள். நாடாளுமன்ற தேர்தலிலும் வெற்றியை தருவீர்கள். மணமக்கள் கலைஞரும் தமிழும் போல, முதல்வரும் உழைப்பும்போல வாழ்வாங்கு வாழ வேண்டும். ஓபிஎஸ், இபிஎஸ் மாதிரி இருந்து விடாதீர்கள். 2 பேரும் கமலாலயத்தில் காத்துக்கிடந்தனர். ஆட்சியில் இருக்கும்போது ஒன்றாக இருந்தனர். பின்னர் தனித்தனியாக செயல்படுகின்றனர். மணமக்கள் இருவரும் படித்துள்ளனர். மருத்துவர்கள். வாழ்வாங்கு வாழ வாழ்த்துகிறேன்” என அவர் பேசினார்.

இந்த திருமண விழாவில் அமைச்சர் நேரு, முன்னாள் அமைச்சர் செல்வகணபதி, சேலம் பாராளுமன்ற உறுப்பினர் பார்த்திபன், கள்ளக்குறிச்சி பாராளுமன்ற உறுப்பினர் பொன்.கவுதம சிகாமணி, சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ராஜேந்திரன், முன்னாள் எம்எல்ஏ சிவலிங்கம் மற்றும் திரளான நிர்வாகிகள் தொண்டர்கள் பங்கேற்றனர்.

First published:

Tags: ADMK, DMK, EPS, OPS, Salem, Udhayanidhi Stalin