முகப்பு /செய்தி /சேலம் / தமிழக இளைஞர்களுக்கு வேலை கிடைக்கவில்லை எனக் கூறுவது தவறு... துரை வைகோ

தமிழக இளைஞர்களுக்கு வேலை கிடைக்கவில்லை எனக் கூறுவது தவறு... துரை வைகோ

துரை வைகோ

துரை வைகோ

Durai vaiko | வடமாநிலத்தவர்கள் தாக்கப்படுவதாக தவறான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், இது குறித்து துரை வைகோ கருத்து தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Salem, India

சேலம் எருமபாளையத்தில் நடந்த திருமண விழாவில் மதிமுக தலைமை கழக செயலாளர் துரை வைகோ நேற்று கலந்து கொண்டார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாட்டில் வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக சிலர் வதந்தி பரப்பியதால் தற்போது பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வதந்தியை சிலர் சமூக வலைதளங்களில் பரப்பி உள்ளனர். இந்த வதந்தியால் தமிழகத்திற்கு பாதிப்பு ஏற்படும்.  கொரோனா காலத்தில் பல தொழிற்சாலைகள் மூடப்பட்டன.  இதன் பின்னர் கடந்த ஒன்றை ஆண்டு காலமாக மீண்டும் தொழிற்சாலைகள் நல்லவிதமாக இயங்கி வருகிறது. தற்போது ஏற்பட்டுள்ள இந்த புரளியால் மீண்டும் அதுபோன்ற நிலை ஏற்பட்டு விடக்கூடாது என கூறினார்.

இதையும் படிங்க; சரும நோய்களுக்கு பயன்படுத்தக் கூடிய மருந்துகள் மதுவுக்கு அடிமையாவதை கட்டுப்படுத்தலாம் - ஆய்வில் தகவல்.!

புரளி பரப்பியோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழக அரசு பல லட்சம் கோடி மதிப்பில் தொழிற்சாலைகள் வர ஒப்பந்தம் செய்திருக்கிறது. இதன் மூலம் வேலை வாய்ப்பு உருவாகும். இந்த நேரத்தில் புரளி பரப்பட்டு இருக்கிறது.  தமிழகத்தில் தற்போது 50 சதவீதம் முதல் 70 சதவீதம் வரை வெளி   மாநில தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.  அவர்கள் போய்விட்டால் தொழிற்சாலைகள் முடங்கிவிடும் இன்னும் சிலர் தமிழர்களுக்கு, தமிழக இளைஞர்களுக்கு வேலை கிடைக்கவில்லை என தெரிவிக்கின்றனர் . இது தவறு. நம் இளைஞர்கள் பலர் படித்து நல்ல வேலைக்கு சென்று வல்லுனராக உள்ளனர். நமது இளைஞர்கள் ஒயிட் காலர் ஜாப்பிற்கு சென்றுவிட்டனர்.  இதனால் மற்ற வேலைகளுக்கு வர கூச்சப்படுகின்றனர்.  இதனால் தான் வடநாட்டினர் அந்த வேலைகளுக்கு வந்து திறம்பட பணியாற்றி வருகின்றனர். ஓட்டல்கள் மற்றும் டீக்கடைகளில் வடநாட்டினர் வேலை பார்க்கின்றனர் என தெரிவித்தார்.

இந்த நிலையில் தான் பாஜக உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த பாஜக நிர்வாகி மற்றும் மேலும் சிலர் வதந்தியை பரப்பி உள்ளனர்.

இவர்கள் மீது தமிழக அரசு வழக்கு பதிவு செய்துள்ளது.

பாஜக நிர்வாகி தான் வதந்தி பரப்ப முக்கிய காரணம்.

இவர் இது போன்று பலமுறை வதந்திகளை பரப்பியுள்ளார்.

நம் தமிழர்கள் மற்ற மாநிலங்களில் லட்சக்கணக்கில் வசிக்கிறார்கள் . குறிப்பாக பெங்களூரில் பலரும் வசிக்கின்றனர்.  இவர்கள் தாக்குதலுக்கு உள்ளாக வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது.  தற்போது ஏற்பட்ட பிரச்னையால் தொழில் வர்த்தகம் பாதிக்கப்படும்.  வன்முறை தூண்டி விட வாய்ப்புள்ளது.

அதானி பிரச்னை ஏற்பட்டபோது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ராணுவ வீரர் இறந்த சம்பவத்தால்  பரபரப்பு ஏற்பட்டது.

இந்த சம்பவம் இரண்டு குடும்பத்தினர் இடையே ஏற்பட்ட சம்பவம் ஆகும். ஆனால் இதை வேண்டும் என்றே பொய்யாக  பரப்பினர் என தெரிவித்துள்ளார்.

மேலும், தற்போது 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் முழு நாள் வேலை தருவதில்லை . 20 நாளோ அல்லது 30 நாளோ வேலை வழங்கப்படுகிறது.  ஒன்றிய அரசு உரிய நிதியை ஒதுக்குவது இல்லை. 100 நாள் வேலை திட்டத்திற்கு உரிய நிதியை ஒன்றிய அரசு  ஒதுக்க வேண்டும். தமிழகத்தில் பூரண மதுவிலக்கை கொண்டு வர வேண்டும் என பேசினார்.

First published:

Tags: Durai Vaiko, MDMK, Mdmk leader vaiko, Salem, Vaiko