ஹோம் /நியூஸ் /சேலம் /

அதிகாலையில் வீடு புகுந்த முகமூடி கொள்ளையர்கள்.. அலறிய பெண் - எடப்பாடியில் அச்சத்தில் பொதுமக்கள்

அதிகாலையில் வீடு புகுந்த முகமூடி கொள்ளையர்கள்.. அலறிய பெண் - எடப்பாடியில் அச்சத்தில் பொதுமக்கள்

போலீஸ் விசாரணை

போலீஸ் விசாரணை

Salem | எடப்பாடி அருகே முகமூடி அணிந்து வீடு புகுந்து திருடும் அடையாளம் தெரியாத நபர்களால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Salem, India

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே கோணபைப் பகுதியைச் சேர்ந்தவர் சுந்தரம். இவரது மனைவி சரோஜா. இவர்கள் நேற்று இரவு வழக்கம் போல் வீட்டை உள் பக்கமாக தாழிட்டு விட்டு  தூங்கி கொண்டிருந்துள்ளனர். இந்த நிலையில் இன்று அதிகாலை 2 மணி அளவில் வீட்டின் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே புகுந்த,  முகமூடி அணிந்த இரண்டு கொள்ளையர்கள் சரோஜாவை வீட்டில் இருந்து வெளியே வலுக்கட்டாயமாக இழுத்து வந்துள்ளனர்.  அப்போது சரோஜா கூச்சலிட சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்துள்ளனர்.

அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் சரோஜாவை கடுமையாக தாக்கி விட்டு கழுத்தில் அணிந்திருந்த சுமார் 5பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு முகமூடி கொள்ளையர்கள் தப்பி ஓடி விட்டனர். கொள்ளையர்கள் தாக்கியதில் பலத்த காயம் ஏற்பட்டு இரத்த வெள்ளத்தில் துடிதுடித்த சரோஜாவை எடப்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.

இந்த கொள்ளை சம்பவம் குறித்து எடப்பாடி காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த சங்ககிரி காவல்துணை கண்காணிப்பாளர் ஆரோக்கியராஜ், சேலம் மாவட்ட ஊரக உட்கோட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தையல்நாயகி  உள்ளிட்ட போலீசார், கொள்ளையர்கள் விட்டுசென்ற தடையங்களை சேகரித்து குற்றவாளிகள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் சரோஜாவின் வீட்டில் சிசிடிவி கேமரா இல்லை. அதே வீதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே நேற்று இரவு வந்த முகமூடிக் கொள்ளையர்களின்  சிசிடிவி காட்சி தற்பொழுது வெளியாகி உள்ளது. கையில் டார்ச் லைட் அடித்து வருவதால் அவர்களை அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

எடப்பாடி சுற்றுவட்டார பகுதிகளில், இதற்கு முன்பாக பல முறை இது போன்ற சம்பவங்கள் நடந்தேறியுள்ளது. முகமூடி கொள்ளையர்களின் நடமாட்டம் குறித்த சிசிடிவி காட்சிகள் பலமுறை வெளியான நிலையிலும் கூட இதுவரை காவல் துறையினர் யாரையும் கைது செய்யாத நிலையில் தற்போது மீண்டும் முகமூடி கொள்ளையர்கள் தங்களது கைவரிசை காட்டத் தொடங்கியுள்ளனர்.

Also see... ’பொன்னியன் செல்வனுக்கு வணக்கத்தைப்போடு...’ - குதிரையில் வந்து ரசிகர்களை குஷிப்படுத்திய கூல் சுரேஷ்..!

இதே போன்று நேற்று பூலாம்பட்டி பகுதியில் பட்டப்பகலில் பூட்டப்பட்ட வீட்டின் கதவை உடைத்து 30 பவுன் நகையை கொள்ளை அடித்து சென்ற நிலையில் இன்று அதிகாலை முகமூடி கொள்ளையர்கள் எடப்பாடியில் பெண்ணை தாக்கி விட்டு நகையை பறித்துச் சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Published by:Vaijayanthi S
First published:

Tags: Crime News, Gold, Robbery, Salem