ஹோம் /நியூஸ் /சேலம் /

எங்க ஊரு சாலையை காணோம்..! - வடிவேலு பாணியில் போராட்டத்தில் இறங்கிய கம்யூனிஸ்ட் கட்சியினர்!

எங்க ஊரு சாலையை காணோம்..! - வடிவேலு பாணியில் போராட்டத்தில் இறங்கிய கம்யூனிஸ்ட் கட்சியினர்!

கலெக்டரிடம் புகார் மௌ அளித்த சிபிஎம்

கலெக்டரிடம் புகார் மௌ அளித்த சிபிஎம்

சேலம் மாநகரில் சாலையை காணவில்லை என்று கூறி, சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் புகார் அளித்துள்ளனர். 

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Salem, India

  சேலம் சாமிநாதபுரம் பகுதியில் சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு மனைகளாக பிரிக்கப்பட்டு நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் விலைக்கு வாங்கி வீடு கட்டி வசித்து வருகின்றனர். இப்பகுதியில் 20 அடி அகலம் 100அடி நீளத்தில் கௌரம்மாள் காலனி பகுதியையும், வண்டிப்பெட்டி சாலையையும் இணைக்கும் பொதுப்பாதையின் ஒரு பகுதியை ஆக்கிரமித்து வீடு கட்டியுள்ளனர்.

  தற்போது மீதமுள்ள பகுதியை சிலர் ஆளுங்கட்சி என்ற பெயரை சொல்லிக்கொண்டு ஆக்கிரமிக்க முயற்சி செய்து வருவதாக கூறி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. சாலையை காணவில்லை என்று கூறி, பதாகைகளை ஏந்திக்கொண்டு சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்திருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

  Also see... திருப்பூர் மாவட்டத்தில் நாளைய மின் தடை பகுதிகள் - உங்க ஏறீய இருக்கா?

  இந்த சாலையை மீட்டு தர வேண்டும் என்பதை வலியுறுத்தி அப்பகுதியை சேர்ந்த நூற்றுக்கு மேற்பட்ட  பொதுமக்களிடம் கையெழுத்து பெற்று சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனுவாக அளிக்கப்பட்டுள்ளது.

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Marxist Communist Party, Road Safety, Salem