சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு பிராணாயாமம் யோகா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக சேலத்தை சேர்ந்த கின்னஸ் சாதனையாளர் மூக்கு துவாரத்தின் வழியாக லாரி டியூப்புகளில் காற்றை நிரப்பி சாதனை நிகழ்த்தினார்.
சேலம் மாவட்டம் இளம்பிள்ளை, அத்தனூர் பகுதியை சேர்ந்தவர் நடராஜ். கராத்தே பயிற்சியாளரான இவர் கின்னஸ் சாதனைகள் உள்பட 97 வகையான சாதனை நிகழ்வுகளை நிகழ்த்திய இவர் தனது 98வது சாதனையை இன்றைய தினம் நிறைவு செய்தார்.
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, யோகாசன பயிற்சியில் மிகவும் முக்கியமான பிராணாயாமம் எனப்படும் மூச்சு பயிற்சி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மூக்கின் துவாரம் வழியாக லாரி சக்கரங்களில் பயன்படுத்தப்படும் 3 டியூப்களில் காற்று நிரப்பி தனது சாதனையை அறங்கேற்றினார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
நீதித்துறை அலுவலர்கள் மற்றும் காவல்துறை அலுவலர்கள் முன்னிலையில் 9 நிமிடம் 45 வினாடிகளில் நிகழ்த்தப்பட்ட இந்த சாதனையை வோர்ல்டு டேலன்ட் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் என்ற நிறுவனம் அங்கீகரித்து அதற்கான சான்றிதழை வழங்கியுள்ளது.
ஏற்கனவே தொடர் மூச்சுப்பயிற்சியில் ஈடுபட்டு வந்ததால் இந்த சாதனை எளிதாக இருந்ததாகவும், மற்றவர்கள் முறையான பயிற்சி இல்லாமல் முயற்சித்தால் உயிருக்கு ஆபத்து நேரிடும் என்றும் எச்சரித்த நடராஜ், ஏற்கனவே யோகாதினம் குறித்து பெரும்பாலானோரிடம் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது.
ஒவ்வொரு மனிதமும் தனது வாழ்நாளில் ஆரோக்கியமாக வாழவேண்டும் என்றால் மூச்சு பயிற்சி முக்கியம். எனவே, அனைவரும் மூச்சு பயிற்சியை மேற்கொள்ள வேண்டும் என்றார். நடராஜின் சாதனையை அங்கு கூடியிருந்த பொதுமக்கள் அனைவரும் பாராட்டினர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.