ஹோம் /நியூஸ் /சேலம் /

ஆற்றின் நடுவே மண்டியிட்டவாறு இளைஞர் சடலமாக மீட்பு - போலீஸார் தீவிர விசாரணை

ஆற்றின் நடுவே மண்டியிட்டவாறு இளைஞர் சடலமாக மீட்பு - போலீஸார் தீவிர விசாரணை

Salem | சேலம் திருமணிமுத்தாற்றின் நடுவில் மண்டியிட்டவாறு தூக்கில் தொங்கிய நிலையில் வாலிபர் சடலம் மீட்கப்பட்டது.

Salem | சேலம் திருமணிமுத்தாற்றின் நடுவில் மண்டியிட்டவாறு தூக்கில் தொங்கிய நிலையில் வாலிபர் சடலம் மீட்கப்பட்டது.

Salem | சேலம் திருமணிமுத்தாற்றின் நடுவில் மண்டியிட்டவாறு தூக்கில் தொங்கிய நிலையில் வாலிபர் சடலம் மீட்கப்பட்டது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Salem, India

  சேலம் செவ்வாய்பேட்டை காளியம்மன் கோவில் அருகே உள்ள திருமணிமுத்தாறு கரையின் நடுவே முள்மரத்தில் வாலிபர் ஒருவர் தூக்கிட்டு இறந்த நிலையில் சடலமாக இருந்துள்ளார். இதனைப் பார்த்த அப்பகுதி பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பெயரில் விரைந்து வந்த காவல்துறையினர் இறந்தவர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தினர்.

  இந்த விசாரணையில் சேலம் செவ்வாய்பேட்டை ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்த முருகன்(29) என்பது தெரியவந்தது. இவர் இங்கு பித்தளை மண் சுத்திகரிக்கும் தொழில் செய்து வந்துள்ளார். இவர் தாய், தந்தையை இழந்த நிலையில் தனது சகோதரர்களுடன் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் உடன் பணியாற்றும் பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். தினசரி மணிக்கணக்கில் செல்போனில் அந்த பெண்ணிடம் பேசி வந்துள்ளார்.

  இந்நிலையில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. நேற்று இரவு முருகனின் சகோதரர் சந்துரு என்பவர் சகோதரரை காணவில்லை என்று தேடிப் பார்த்துள்ளார். கிடைக்காத நிலையில் தூங்கி எழுந்து பார்த்தபோது அவர்கள் பணியாற்றும் கம்பெனி அருகே உள்ள திருமணிமுத்தாறு ஆற்றின் நடுவே சிறியளவில் உள்ள முள் மரத்தில் மண்டியிட்டு கயிற்றால் தூக்கில் தொங்கியவாறு சடலமாக கிடந்துள்ளார்.

  Also see... சென்னை புறநகர் பகுதிகளில் கொட்டித்தீர்த்த கனமழை...!

  இதுதொடர்பாக தகவலறிந்து வந்த அன்னதானப்பட்டி காவல்துறையினர் உடலை மீட்டு இறப்பிற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதாவது காரணமா என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  செய்தியாளர்: திருமலை தமிழ்மணி (சேலம்)

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Crime News, Death, Salem