முகப்பு /செய்தி /சேலம் / பிஸ்கட்டில் கிரீமுக்கு பதிலாக கஞ்சா.. சிறைக்குள் செல்லும் போதைப்பொருள்.. சேலத்தில் ஷாக் சம்பவம்!

பிஸ்கட்டில் கிரீமுக்கு பதிலாக கஞ்சா.. சிறைக்குள் செல்லும் போதைப்பொருள்.. சேலத்தில் ஷாக் சம்பவம்!

பிச்கெட்டில் கஞ்சா வைத்து சிறை கைதிக்கு கொடுத்தவர் கைது

பிச்கெட்டில் கஞ்சா வைத்து சிறை கைதிக்கு கொடுத்தவர் கைது

cannabis in prison | சேலத்தில் சிறையில் இருக்கும் அண்ணனுக்கு பிஸ்கட் பாக்கெட்டில் மறைத்து கஞ்சா சப்ளை செய்த தம்பி கைது செய்யப்பட்டுள்ளார்

  • Last Updated :
  • Salem, India

சேலம் மாவட்டம் இடங்கணசாலை பகுதியை சேர்ந்தவர் கார்த்திக். இவரை ஒரு திருட்டு வழக்கில் ஆட்டையாம்பட்டி போலீசார் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்துள்ளனர். மேலும் இந்த வழக்கில் அவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு விதித்துள்ளது.

இந்த நிலையில் கார்த்திக்கை பாப்பதற்காக அவருடைய தம்பி சித்தேஸ் என்பவர் நேற்று மதியம் சிறைக்கு வந்தார். அப்போது கார்த்திக்கிற்கு கொடுப்பதற்காக சித்தேஸ் வைத்திருந்த கிரீம் பிஸ்கட்டை வாங்கி சிறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது பிஸ்கட்டின் நடுவில் கிரீமிற்கு பதிலாக கஞ்சா வைக்கப்பட்டிருந்தது கண்டுப்பிடிக்கப்பட்டது. அதில் சுமார் 20 கிராம் கஞ்சா இருந்தது. அதை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Also see... கோவை கார் வெடிப்பு.. சென்னைக்கு விரைந்த என்ஐஏ.. 5 இடங்களில் சோதனை

இதையடுத்து கைதிக்கு கஞ்சா கொடுக்க முயன்ற சித்தேசை பிடித்து அஸ்தம்பட்டி காவல் நிலையத்தில் சிறை அதிகாரிகள் ஒப்படைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சித்தேசை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து சிறைத்துறை எஸ்.பி தமிழ்செல்வன் கூறியபோது, “சிறைத்துறை எப்போதும் கூடுதல் கண்காணிப்பில்தான் இருந்து வருகிறது. கைதிகளைப் பார்ப்பதற்காக உறவினர்கள் வந்தாலும், அவர்களைத் தகுந்த பரிசோதனைக்குப் பிறகே உள்ளே அனுமதிக்கிறோம். அப்படிக் கைதியை பார்க்கவந்த இந்த நபரின்மீது சந்தேகம் ஏற்பட்டது. அதன் அடிப்படையில் இவரைப் பரிசோதனை செய்து பார்த்தபோது, அவர் பிஸ்கட்டுகளில் கஞ்சா கொண்டுவந்தது தெரியவந்தது” என்றார்.

செய்தியாளர்: திருமலை தமிழ்மணி, சேலம்

First published:

Tags: Cannabis, Prison, Salem