ஹோம் /நியூஸ் /சேலம் /

சேலத்தில் கள்ளதொடர்பு விவகாரத்தில், கொலை: 2 பேருக்கு ஆயுள் தண்டனை

சேலத்தில் கள்ளதொடர்பு விவகாரத்தில், கொலை: 2 பேருக்கு ஆயுள் தண்டனை

ஆயுள் தண்டனை வழங்கப்பட்ட  பிரபாகரன், அருள்குமார்

ஆயுள் தண்டனை வழங்கப்பட்ட பிரபாகரன், அருள்குமார்

Salem | சேலத்தில் கள்ளதொடர்பு விவகாரத்தில், கொலை செய்த இரண்டு வாலிபர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம்  தீர்ப்பு அளித்துள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Salem, India

சேலம் மணியனூர் பாண்டுரங்கன் தெருவை சேர்ந்த டிராவல்ஸ் உரிமையாளர் அபிஷேக் மாறன்(30), அவரது பாட்டியுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு மே மாதம் 8 ஆம் தேதி நள்ளிரவில் வீட்டின் மொட்டை மாடியில் படுத்து உறங்கி கொண்டிருந்த அபிஷேக் மாறனை மர்மநபர்கள் கழுத்தறுத்து கொலை செய்தனர். இக்கொலை சம்பவம் குறித்து உறவினர்கள் புகார் அளித்ததின்பேரில் உடலை கைப்பற்றி வழக்கு பதிவுசெய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

இந்த வழக்கில் சேலம் தாதகாப்பட்டியை சேர்ந்த பிரபாகரன், எருமாபாளையத்தை சேர்ந்த அருள்குமார் ஆகியோர் கள்ளத்தொடர்பு விவகாரத்தில் கொலை செய்தது தெரியவந்தது. பின்னர் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு விசாரணை சேலம் முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

Also see... நள்ளிரவில் பெண்கள் விடுதியில் புகுந்து கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர் கைது..!

இந்த நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதி ஜெகநாதன் இன்று தீர்ப்பு வழங்கினார். கள்ளத்தொடர்பு விவகாரத்தில் அபிஷேக் மாறனை கொலை செய்த பிரபாகரன், அருள்குமார் ஆகிய இருவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். மேலும் இருவருக்கும் தலா 12000 அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

Published by:Vaijayanthi S
First published:

Tags: Murder case, Salem, Sentenced to life