Home /News /salem /

கனியாமூர் பள்ளி தொடர்பாக செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்கள் மீது தாக்குதல்

கனியாமூர் பள்ளி தொடர்பாக செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்கள் மீது தாக்குதல்

பத்திரிகையாளர் - புகைப்பட கலைஞர்

பத்திரிகையாளர் - புகைப்பட கலைஞர்

கனியாமூர் தனியார் பள்ளி மறுசீரமைப்பு பணிகள் குறித்து செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகை நிருபர், புகைப்பட கலைஞர் மீது தாக்குதல் நடத்திய வழக்கில் பத்து பேர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார், 5 பேரை கைது செய்தனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu | Salem
கனியாமூர் தனியார் பள்ளி மறுசீரமைப்பு பணிகள் குறித்து செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகை நிருபர் மற்றும் புகைப்பட கலைஞர் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே, கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், கடந்த, ஜூலை, 17ல், மாணவி மரணம் தொடர்பாக நடந்த போராட்டத்தின் போது, கலவரம் ஏற்பட்டது.  இந்நிலையில், 65 நாளுக்கு பின் பள்ளி மறு சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. நேற்று மாலை, 5:30 மணியளவில்,பத்திரிகை நிருபர் பிரகாஷ் (56) புகைப்பட கலைஞர் அஜீத்குமார் (24) ஆகியோர், பள்ளியில் மேற்கொள்ளும் மறுசீரமைப்பு பணிகள் குறித்து செய்தி சேகரித்துள்ளனர்.

பின்னர் காரில் சென்றபோது, அவர்களை வழிமறித்து சிலர், காரை உடைத்து தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து தப்பித்த போதிலும், காரை துரத்தி வந்த பத்துக்கும் மேற்பட்டோர் இருவரையும் சரமாரியாக தாக்கியுள்ளனர். அங்கிருந்த பொதுமக்கள் நிருபர்களை மீட்டு தலைவாசல் காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். தொடர்ந்து தாக்குதலில் பல் உடைந்த புகைப்பட கலைஞர் அஜீத்குமாரும், காயமடைந்த நிருபர் பிரகாஷும் ஆத்துார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

ALSO READ | திமுக நிர்வாகி இறுதிஊர்வலத்தில் மனைவிகளின் உறவினர்கள் மோதல் - பக்கத்து வீட்டுக்காரருக்கு கத்திக்குத்து

நிருபர் பிரகாஷ் அளித்த புகாரில், பள்ளி நிர்வாகி ரவிக்குமாரின் தம்பி அருள்சுபாஷ், மோகன், ராஜசேகர் உள்பட 10 பேர் மீது கொலை முயற்சி உள்பட எட்டு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த போலீசார், சின்னசேலத்தை சேர்ந்த, செல்வராஜ் (35) தீபன்சக்கரவர்த்தி, (36), செல்வக்குமார் (38), பாலகிருஷ்ணன்(45), ராஜசேகர்(44) ஆகிய 5 பேரை கைது செய்தனர்.
Published by:Anupriyam K
First published:

Tags: Attack, Crime News, Salem

அடுத்த செய்தி