Home /News /salem /

கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கு: பள்ளி நிர்வாகிகள் ஜாமீனில் விடுதலை

கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கு: பள்ளி நிர்வாகிகள் ஜாமீனில் விடுதலை

பள்ளி நிர்வாகிகள் விடுதலை

பள்ளி நிர்வாகிகள் விடுதலை

சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த பள்ளியின் தாளாளர் ரவிக்குமார் முதல்வர் சிவசங்கரன் ஆகியோரும் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Kallakkurichi (Kallakurichi), India
    மாணவி உயிரிழந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட சின்ன சேலம் கனியாமூர் தனியார் பள்ளி நிர்வாகிகள் உள்ளிட்டோர் ஜாமினில் வெளிவந்தனர்.

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் தனியார் பள்ளியில் பயின்று வந்த பனிரண்டாம் வகுப்பு மாணவி உயிரிழந்த விவகாரம் தொடர்பாக பள்ளித் தாளாளர் உள்ளிட்ட ஐந்து பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இவர்கள் அனைவரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இதனிடையே ஜாமின் கோரி இவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்த நிலையில் நிபந்தனை அடிப்படையில் இவர்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. இதனையடுத்து, சேலம் பெண்கள் கிளை சிறையில் அடைக்கப்பட்டிருந்த கனியாமூர் பள்ளியின் செயலாளர் சாந்தி ஆசிரியர்கள் ஹரிப்பிரியா மற்றும் கிருத்திகா ஆகியோர் காலை 7:30 மணியளவில் வெளியே வந்தனர்.

    இதையும் படிங்க: பிள்ளையார் சிலைகளை கடலிலும், நீர்நிலைகளிலும் கரைக்கவேண்டாம் - பூவுலகின் நண்பர்கள் அமைப்பு விளக்கம்

    இதேபோல் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த பள்ளியின் தாளாளர் ரவிக்குமார் முதல்வர் சிவசங்கரன் ஆகியோரும் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.  இவர்களில் பள்ளி நிர்வாகிகள் மற்றும் முதல்வர் ஆகியோர் மதுரையில் தங்கி இருந்து கையெழுத்திட வேண்டும் என்றும் ஆசிரியர்கள் இருவரும் சேலத்திலேயே தங்கி கையெழுத்து இடவேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    செய்தியாளர்: திருப்பதி- சேலம்
    Published by:Murugesh M
    First published:

    Tags: Death, Kallakurichi, School

    அடுத்த செய்தி