கோகுல்ராஜ் கொலை வழக்கை விசாரித்துவரும் உயர்நீதிமன்ற நீதிபதிகள், திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயிலுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர்.
சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த கோகுல்ராஜ் என்பவர் தனது தோழியுடன், திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலை கோயிலுக்குச் சென்று திரும்பியபோது, சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இந்த ஆணவக் கொலை வழக்கில் யுவராஜ் உள்ளிட்ட 10 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் நடைபெற்று வருகிறது.
விசாரணையின் போது, கோகுல்ராஜ் யார் என்றே தனக்கு தெரியாது எனவும், திருச்செங்கோடு மலைக் கோயிலுக்குச் செல்லவில்லை எனவும் சுவாதி பிறழ் சாட்சியாக மாறினார். மேலும், வழக்கின் முக்கிய சாட்சியாக உள்ள, சிசிடிவி காட்சியில் இருப்பதுதான் இல்லை எனவும் சுவாதி மறுத்துவிட்டார். இந்த நிலையில், திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயிலுக்கு சென்ற நீதிபதிகள் வெங்கடேஷ், ரமேஷ் ஆகியோர் அனைத்து சிசிடிவி கேமராக்களையும் பார்வையிட்டனர். கோகுல்ராஜ் - சுவாதி அமர்ந்து பேசியதாக கூறப்படும் இடத்திலும் ஆய்வு செய்தனர். இதனை தொடர்ந்து கோகுல்ராஜின் உடல் மீட்கப்பட்ட ரயில்வே தண்டவாளத்திலும் ஆய்வு நடத்தினர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: CCTV Footage, Chennai High court, Gokul raj murder, Inspection