முகப்பு /செய்தி /Salem / கோடநாடு வழக்கில் தொடர்புடைய ஜெயலலிதா கார் ஓட்டுநர் கனகராஜின் சகோதரர் கைது

கோடநாடு வழக்கில் தொடர்புடைய ஜெயலலிதா கார் ஓட்டுநர் கனகராஜின் சகோதரர் கைது

கனகராஜின் இளைய சகோதரர் பழனிவேல்

கனகராஜின் இளைய சகோதரர் பழனிவேல்

ஜெயலலிதா கார் ஓட்டுநர் கனகராஜ் மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கனகராஜின் இளைய சகோதரர் பழனிவேலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள சமுத்திரம் கிராமத்தை சார்ந்தவர் கனகராஜ். இவர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநராக பணியாற்றி வந்தவர். இதனிடையே ஜெயலலிதாவிற்கு சொந்தமான நீலகிரியில் உள்ள கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் 23 ஆம் தேதி கொள்ளை சம்பவம் நடைபெற்றது. பாதுகாவலராக இருந்த ஓம்பகதூர் என்பவரை கொலை செய்து விட்டு, சில மதிப்புமிக்க பொருட்கள் ஆவணங்கள் திருடப்பட்டதாக கூறப்படுகின்றது. இது தொடர்பாக  10 பேர்  கைது செய்யப்பட்டனர் .

இவ்வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஓட்டுநர் கனகராஜ் , சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே நடந்த கார் விபத்தில் உயிரிழந்தார் . அப்போது இது விபத்து அல்ல என கனராஜின் மூத்த அண்ணன் தனபால் தெரிவித்து வந்தார். ஆனால் விபத்துதான் என சேலம் மாவட்ட காவல் துறை அதிகாரிகள் திட்டவட்டமாக கூறினர்.

இதனிடையே கோடநாடு வழக்கில் கூடுதல் விசாரணையை துவக்கிய நீலகிரி காவல் துறையினர் 5 தனிப் படைகள் அமைத்தனர். சாட்சிகள், குற்றம் சாட்டப்பட்டவர்கள் அவர்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என பலரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது . இதுவரை 250 க்கும் மேற்பட்டோரிடம் தனிப்படை காவல் துறையினர் கூடுதல் விசாரணை நடத்தியுள்ளனர் .

இதனிடையே கோடநாடு கம்யூட்டர் ஆப்ரேட்டர் தினேஷ்குமார் தற்கொலை வழக்கு மற்றும் கனகராஜ் விபத்து வழக்குகளை காவல் துறையினர் மறு விசாரணை நடத்தினர். அப்போது கோடநாடு வழக்கில் சாட்சியங்களை கலைத்ததாக கனகராஜின் சகோதரர் தனபால் மற்றும் அவரது உறவினர் ரமேஷ் ஆகியோரை நீலகிரி காவல் துறையினர் கைது செய்தனர் . கடந்த சில வாரங்களுக்கு முன்பு இருவரும் நிபந்தனை ஜாமீனில் சிறையில் இருந்து வெளியே வந்து தற்போது ஊட்டியிலேயே தங்கியுள்ளனர் .

Also see... திருப்புமுனை: ஜெயலலிதாவை கொள்கை பரப்புச் செயலாளராக்கி அழகு பார்த்த எம்ஜிஆர்

இந்நிலையில் சென்னை கே.கே.நகர் பாலை தெருவில் வசிக்கும்  கனகராஜின் மனைவி கலைவாணி சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில் கடந்த 3ஆம் தேதி கனகராஜ்க்கு சொந்தமான நிலத்தை விற்பது தொடர்பாக எடப்பாடி அருகே உள்ள பணிக்கனூர் வந்திருந்ததாகவும், நிலத்தை விற்பதற்கு கனகராஜின் இரண்டாவது அண்ணன் பழனிவேல் எதிர்ப்பு தெரிவித்தாகவும் அவர் கூறினார்.

அத்துடன் கலைவாணி அளித்த வாக்குமூலம் அடிப்படையில் தான் தனபால் கைது செய்யப்பட்டதாகவும், வழக்கை திரும்பபெற வேண்டும் என கூறி தன்னை ஆபாசமாக பேசி மிரட்டல் விடுத்ததாகவும், தன்னை மானபங்கப்படுத்தியதாகவும் அவர் அந்த புகாரில் தெரிவித்து இருந்தார் .

ஜலகண்டாபுரம் காவல் நிலையம்

இந்தப்புகாரின் அடிப்படையில் கொலை மிரட்டல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பழனிவேலுவை கைது செய்தனர். கொடநாடு வழக்கு தொடர்பாக கனகராஜின் அண்ணன் தனபால் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது அவரது சகோதரர் பழனிவேலுவும் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது...

First published:

Tags: Jayalalitha, Kodanadu estate