ஹோம் /நியூஸ் /சேலம் /

கள்ளக்காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை... சேலத்தில் அழுகிய நிலையில் சடலங்கள் மீட்பு

கள்ளக்காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை... சேலத்தில் அழுகிய நிலையில் சடலங்கள் மீட்பு

தற்கொலை செய்துகொண்ட கள்ளக்காதல் ஜோடி

தற்கொலை செய்துகொண்ட கள்ளக்காதல் ஜோடி

Salem News : சேலம் அருகே கருமந்துறை வனப்பகுதியில் கள்ளக்காதல் ஜோடி விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டனர். அழுகிய நிலையில் கிடந்த இருவரின் சடலத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Salem, India

சேலம் மாவட்டம் கருமந்துறை அருகே உள்ள கிலாக்காடு வனப்பகுதியில் அழுகிய நிலையில் ஆண், பெண் ஆகிய இருவரின் சடலம் கிடப்பதாக அப்பகுதியில் மாடு மேய்க்க சென்றவர்கள் கருமந்துறை போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் இருவரின் சடலத்தையும் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். அதில் இறந்தவர்களில் ஒருவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலை தொரடிப்பட்டு பஞ்சாயத்திற்கு உட்பட்ட வண்டாபாடி கிராமத்தை சேர்ந்த பூபாலன்(26) என்பது தெரியவந்தது.

மேலும், இவருக்கு திருமணமாகி ஒரு ஆண் குழந்தை உள்ள நிலையில் நெல் அறுவடை செய்யும் இயந்திரத்தில் டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் மூன்று மாதங்களாக தூத்துக்குடி பகுதியில் பணிபுரிந்து வந்துள்ளார்.

இதையும் படிங்க : புயல் எச்சரிக்கை கூண்டுகள்... துறைமுகங்களில் எந்த எண் கூண்டு ஏற்றினால் என்ன அர்த்தம்?

அப்போது இவருக்கும், தூத்துக்குடி அருகிலுள்ள ஆழ்குடி கிராமத்தை சேர்ந்த மூன்று குழந்தைகளின் தாயான வேம்புராஜ் என்பவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.

இதனிடையே வேம்புராஜ் வேறொருவருடன் கள்ளத்தொடர்பில் இருந்ததை அறிந்த அவரது கணவர் இதனை கண்டித்துள்ளார். இதனால் மூன்று குழந்தைகளையும் விட்டுவிட்டு கடந்த 20ம் தேதி வீட்டை விட்டு வேம்புராஜ் கள்ளக்காதலன் பூபாலனுடன் வெளியேறியுள்ளார். பின்னர் வேம்புராஜை அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் தேடி வந்துள்ளனர்.

இந்நிலையில், சேலம் மாவட்டம் கருமந்துறை அருகே உள்ள கிலாக்காடு வனப்பகுதிக்கு இருசக்கர வாகனத்தில் வந்த கள்ளக்காதல் ஜோடி இருவரும் தனிமையில் இருந்தபோது அவர்கள் வைத்திருந்த விஷத்தை அருந்தி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இதையும் படிங்க : ’நீங்க செத்து 4 மாசம் ஆச்சு...’ - ஓஏபி பணம் வாங்கச்சென்ற முதியவருக்கு அதிர்ச்சியளித்த அதிகாரிகள்!

 இதனையடுத்து கள்ளக்காதலர்கள் இருவரது உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கள்ளக்காதல் ஜோடி வனப்பகுதியில் சடலமாக கண்டெடுத்த இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை தீர்வல்ல: மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும். மாநில உதவிமையம்: 104 ; சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050

Published by:Karthi K
First published:

Tags: Crime News, Salem