ஹோம் /நியூஸ் /சேலம் /

மனைவியின் கள்ளக்காதலனை ஓட ஓட விரட்டி அரிவாளால் வெட்டிய கணவன்.. சேலத்தில் நடந்த பயங்கரம்

மனைவியின் கள்ளக்காதலனை ஓட ஓட விரட்டி அரிவாளால் வெட்டிய கணவன்.. சேலத்தில் நடந்த பயங்கரம்

சேலம்

சேலம்

Crime news: கள்ளக்காதலை கைவிட மறுத்த மனைவியின்  கள்ளக் காதலனை  கணவன் ஓட ஓட  விரட்டி  வெட்டிய  சம்பவம்   பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Salem, India

ஆத்தூர்  அருகே  கள்ளக்காதலை கைவிட மறுத்த மனைவியின் கள்ளக்காதலனை  ஓட, ஓட  விரட்டி  அரிவாளால் வெட்டிய  கணவன் கைது செய்யப்பட்டுள்ளார். 

சேலம்  மாவட்டம்  கெங்கவல்லி அருகே உள்ள   தெடாவூர்  தெற்கு மணக்காடு  பகுதியை  சேர்ந்தவர்  முருகன்  இவரது  மகன்  ஜெகதீஸ் ( வயது 23 )இவர் கூட்டுறவு  பால்  சொசைட்டிக்கு  சரக்கு  வாகனத்தில்  பால்  லோடு  ஏற்றி  வரும் வேலை செய்து வருகிறார் . இவரது  பக்கத்து  வீட்டில்  வசித்து  வரும் பிரதீப் (வயது 28 ) என்பவரின்  மனைவிக்கும்  ஜெகதீசுக்கும்  இடையே  ஓராண்டிற்கு  முன்பு பழக்கம்  ஏற்பட்டுள்ளது .

நெருங்கி  பழகிய  அவர்கள்  கடந்த 8 மாதத்திற்கு  முன் வீட்டை  விட்டு  ஓடி விட்டனர் . இதனை அடுத்து கணவர்  பிரதீப்  போலீசில்  புகார் செய்த  நிலையில்  கள்ளக் காதல்  ஜோடியை  பிரித்து  அறிவுரைக் கூறி  அனுப்பி வைத்துள்ளனர் .  இந்த நிலையில் மீண்டும்  பிரதீப்பின்  மனைவியுடன்  ஜெகதீஸ் கள்ளக்காதலை  தொடர்ந்துள்ளார் .  இருவரும்  அடிக்கடி  தனிமையில்  சந்தித்து  வந்துள்ளனர் .

Also Read:  செல்போனை உடைத்ததால் ஆத்திரம்.. காதல் மனைவி தூக்கிட்டு தற்கொலை - நெல்லையில் அதிர்ச்சி சம்பவம்

இதனை அறிந்த பிரதீப்  தனது  மனைவியுடன்  உள்ள  கள்ளத் தொடர்பை  கைவிடுமாறு  ஜெகதீசை  கண்டித்து வந்துள்ளார் . ஆனாலும்  அவர் கள்ளக்காதலை  தொடர்ந்ததாக  கூறப்படுகிறது . இதனால் ஆத்திரமடைந்த பிரதீப் இரண்டு நாட்களுக்கு முன்பு, ஆறகளூரில் இருந்து வேப்பம்பூண்டி செல்லும் சாலையில் மாரியம்மன் கோயில்  அருகே சரக்கு வாகனத்தில்  வந்த ஜெகதீசை வழிமறித்து சரமாரியாக  அரிவாளால்  வெட்டியுள்ளார் .

இதனால்   அங்குமிங்கும்  அவர் ஓடியுள்ளார் . ஆனாலும்  துரத்திச்  சென்று  கை , தோள்பட்டை  உள்ளிட்ட இடங்களில்  வெட்டியதில்  படுகாயமடைந்த ஜெகதீஸ்  தான்  ஓட்டி  வந்த  சரக்கு வாகனத்தை  எடுத்துக்  கொண்டு  வேகமாக  சென்றுள்ளார் . சிறிது  தூரத்தில் தென்னை  மரத்தில்  மோதி  வாகனம்  நின்றுள்ளது .   பின்னர் அவ்வழியாக  வந்தவர்கள் படுகாயமடைந்து  உயிருக்கு  போராடிக் கொண்டிருந்த  ஜெகதீசை  மீட்டு  ஆத்தூர்  அரசு  தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர்  மேல்  சிகிச்சைக்காக  சேலம்  அரசு  மருத்துவமனையில் சேர்த்துள்ளனர், அங்கு  அவருக்கு  தீவிர  சிகிச்சை அளிக்கப்பட்டு  வருகிறது.

Also Read:  தூக்கு போட முயற்சித்த மனைவி.. தடுக்காமல் கூலாக வீடியோ எடுத்த கணவர் கைது.. உபியில் அதிர்ச்சி

இதனையடுத்து ஜெகதீசின் பெற்றோர் வீரகனூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார்  விசாரணை  நடத்தி , கொலை  முயற்சி  வழக்குப் பதிவு செய்து பிரதீப்பை  கைது  செய்தனர் . பின்னர் அவரை  ஆத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி  சிறையில்  அடைத்தனர் . கள்ளக்காதலை கைவிட மறுத்த மனைவியின்  கள்ளக் காதலனை  கணவன் ஓட ஓட  விரட்டி  வெட்டிய  இச்சம்பவம்  அப்பகுதியில்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Published by:Ramprasath H
First published:

Tags: Attempt murder case, Crime News, Illegal affair, Illegal relationship, Salem, Tamil News