ஹோம் /நியூஸ் /சேலம் /

இன்பநிதி அமைச்சரானாலும் ஏற்போம் என கூறும் அமைச்சர்கள் எப்படி மக்களுக்கு நன்மை செய்வார்கள் - எடப்பாடி பழனிசாமி கேள்வி

இன்பநிதி அமைச்சரானாலும் ஏற்போம் என கூறும் அமைச்சர்கள் எப்படி மக்களுக்கு நன்மை செய்வார்கள் - எடப்பாடி பழனிசாமி கேள்வி

எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

தமிழக அரசு பொங்கல் தொகுப்பில் கரும்பை  கொள்முதல் செய்து சேர்க்க வேண்டும்...எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேச்சு...

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Salem, India

சேலம் சூரமங்கலம் அருகே உள்ள   ஜாகீர் அம்மாபாளையம் பகுதியில் மாற்றுகட்சியினர் அதிமுகவில் சேரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பேசிய எடப்பாடி பழனிசாமி, அதிமுக கொண்டுவந்த 8 வழிச்சாலை திட்டத்தை தான் திமுக தற்போது கொண்டுவருகிறது என தெரிவித்தார். மேலும், 20 மாத கால திமுக ஆட்சியில் செய்தது என்ன? என கேள்வி எழுப்பிய அவர், அன்று அதிமுக திட்டத்தை எதிர்த்தவர்கள் தான் இன்று அதையே நல்ல திட்டம் என கொண்டுவருகிறார்கள் என கூறினார்.

சாலைகள் இருந்தால் தான் நாடு வளர்ச்சி அடைய முடியும், எரிபொருள் மிச்சமாகும், சுற்று சூழல் பாதுகாக்கப்படும் என கூறிய அவர், அன்று போராட்டம் நடத்திய திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் தான் இப்போது அந்த திட்டம் செயல்படுத்தும்போது ஜால்ரா அடிக்கிறார்கள் என விமர்சித்தார்.

விவசாயிகளுக்கு 12,110 கோடி கடனை தள்ளுபடி செய்தோம். 562 கோடியில் 100 ஏரிக்கு தண்ணீர் கொண்டு செல்ல நிதி ஒதுக்கி திட்டத்தை தொடங்கி வைத்தோம். ஆனால் திமுக அரசு அம்மா கிளினிக் மூடிவிட்டனர். ஏரிக்கு தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்தையும் முடக்கிவிட்டனர். அத்திக்கடவு அவினாசி திட்டத்தை முடக்கி விட்டனர்.

உதயநிதி ஸ்டாலினுக்கு முடி சூட்டி விட்டார்கள். தொடர்ந்து இன்பநிதி அமைச்சரானாலும் ஏற்போம் என்கிறார்கள். அடிமை என்றால் அதற்கு அளவே இல்லை. இந்த அமைச்சர்கள் எப்படி மக்களுக்கு நன்மை செய்வர் என கடுமையாக விமர்சித்தார்.

First published:

Tags: ADMK, CM MK Stalin, Edappadi Palaniswami, Salem, Udhayanidhi Stalin