முகப்பு /செய்தி /Salem / ஏற்காடு செல்வோருக்கு ஹெல்மெட் கட்டாயம்... காவல்துறை அதிரடி நடவடிக்கை

ஏற்காடு செல்வோருக்கு ஹெல்மெட் கட்டாயம்... காவல்துறை அதிரடி நடவடிக்கை

காட்சிப்படம்

காட்சிப்படம்

Yercaud | பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில்கொண்டு விபத்துக்கள் நடைபெறுவதை தடுக்க ஏற்காடு செல்லும் அனைவரும் ஹெல்மட் கட்டாயம் அணிய வேண்டும் என சேலம் மாவட்ட காவல் துறை அறிவிப்பு விடுத்துள்ளது. 

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

தமிழகத்தின் சுற்றுலாத்தலங்களில் ஏற்காடு முக்கிய பங்கு வகிக்கிறது. கொரோனா காலக்கட்டத்திற்கு பிறகு சுற்றுலாத்தலங்களை நோக்கி படையெடுக்கும் மக்களின் கூட்டம் அதிகரித்திருக்கிறது. அந்த வகையில் ஊட்டி, கொடைக்கானல், ஒக்கேனக்கல், ஏற்காடு போன்ற முக்கிய சுற்றுலாத்தலங்களை நோக்கி வரும் சுற்றுலாப்பயணிகளின் பாதுகாப்பை உறுதிசெய்வதில் தமிழ்நாடு காவல்துறை கவனமாக உள்ளது.

இந்நிலையில் ஏற்காடு மலைப்பாதையில் நேற்று விபத்தில் சிக்கி தந்தை,மகள் பலி ஆனார்கள். இந்த சம்பவத்தை தொடர்ந்து ஏற்காடு மலைப்பகுதியில் பயணம் செல்லும் அனைவருக்கும் ஹெல்மட் கட்டாயம் என்ற அறிவிப்பை சேலம் மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது . விபத்துகள் அதிகம் நடைப்பெறும் வாய்ப்புகள் இருப்பதாலும், மலைப்பகுதியில் மக்களுக்கு கூடுதல் கவனம் தேவை என்பதாலும் மாவட்ட காவல் துறை சார்பில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Read More : தெருவில் நிறுத்தி வைத்த டூவிலருடன் சேர்ந்து போடப்பட்ட சிமெண்ட் சாலை.. தூங்கி எழுந்ததும் அதிர்ச்சியடைந்த மக்கள்..

மேலும் விடுமுறை நாட்களில் கூட்டம் அதிகரிப்பதால் வாகன போக்குவரத்து அதிகமாவதன் காரணமாக விபத்துக்கள் நடக்காமல் இருக்க ஏற்காடு மலைப்பாதையில் செல்வோர் கட்டாயம் தலைக்கவசம் அணிய காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.அறிவிப்பை மீறி வரும் தலைக்கவசம் அணியாத இரண்டு சக்கர வாகன ஓட்டிகள் திருப்பி அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

First published:

Tags: Helmet, Salem, Yercaud Constituency