ஹோம் /நியூஸ் /சேலம் /

ஏழைகளின் ஊட்டிக்கு படையெடுத்த சுற்றுலா பயணிகள்..! ஸ்தம்பித்த ஏற்காடு

ஏழைகளின் ஊட்டிக்கு படையெடுத்த சுற்றுலா பயணிகள்..! ஸ்தம்பித்த ஏற்காடு

ஏற்காடு

ஏற்காடு

விடுமுறையில் ஊருக்கு சென்ற மாணவர்கள் ஏற்காடு திரும்பியதாலும், ஏற்காட்டில் தங்கியிருந்தவர்கள் சொந்த ஊர்களுக்கு சென்றதாலும், வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Yercaud, India

சேலம் மாவட்டத்தில் உள்ள ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காட்டிற்கு, செவ்வாய்கிழமை பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். அங்குள்ள அண்ணா பூங்கா, லேடீஸ் சீட், ஜெண்ட்ஸ் சீட், பக்கோடா பாயிண்ட், தாவரவியல் பூங்கா, ரோஜா தோட்டம் உள்ளிட்ட பல்வேறு இடங்களை கண்டு களித்தனர்.

குறிப்பாக மக்கள் அங்குள்ள அண்ணா பூங்கா மற்றும் மான் பூங்காவில், குடும்பத்தினருடன் உற்சாகமாக பொழுதை போக்கி மகிழ்ந்தனர். ஏற்காட்டில்  இதமான சீதோஷ்ணம் நிலவியதால், படகு இல்லத்தில் படகு சவாரி செய்ய ஏராளமானோர் குவிந்தனர். கூட்டம் அதிகமானதால், வரிசையில் காத்திருந்து படகு சவாரி செய்தனர்.

ஏற்காட்டில் பிரபலமான தனியார்  பள்ளியில் பல்வேறு மாவட்டங்களைச் சார்ந்த சுமார் 700 பேர் படித்து வருகின்றனர். தீபாவளியையொட்டி தொடர் விடுமுறை கிடைத்ததால் அவரவர் சொந்த ஊருக்கு சென்றிருந்த மாணவர்கள் ஏற்காடு திரும்பினர்.

Also see... வாகன ஓட்டிகளே உஷார்.. நாளைக்கு போலீஸ் கிட்ட மாட்டுனா இதுதான் ஃபைன்.. முழு விவரம்!

அதே நேரத்தில் ஏற்காட்டில் தங்கி விடுமுறையை கழித்த சுற்றுலா பயணிகள் அவரவர் ஊருக்கு கிளம்பினர். இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகனங்கள் ஊர்ந்து சென்றன. ஏற்காடு பேருந்து நிலையம் முதல் இருபதாவது கொண்டை ஊசி வளைவு வரை வாகனங்கள் அணிவகுத்து நின்றன. போலீசார் போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

Published by:Vaijayanthi S
First published:

Tags: Diwali festival, Holiday Vacation, Salem, Traffic, Yercaud Constituency