சொகுசு காரில் பெங்களூரில் இருந்து ஹான்ஸ், குட்கா உள்ளிட்ட போதை பொருட்களை கடத்தி வந்த நபர் உள்ளிட்ட இருவர் சேலத்தில் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான 46 மூட்டை ஹான்ஸ், குட்கா, மற்றும் சொகுசு காரையும் பறிமுதல் செய்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ், குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் மளிகை கடைகள், பெட்டி கடைகளில் சட்டவிரோதமாக கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு புகார் சென்றது, அதன்பேரில் போலீசார் தனிப்படை அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே இன்று அதிகாலையில் தனிப்படை போலீசார் கெங்கவல்லி அருகே உள்ள தெடாவூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். அப்போது ராஜா என்பவருடைய மளிகை கடையில் சொகுசு காரில் இருந்து ஹான்ஸ், குட்கா உள்ளிட்ட போதை பொருட்களை மூட்டை மூட்டையாக இறக்கி கொண்டிருந்த போது கையும் களவுமாக பிடித்த போலீசார் கார் ஓட்டுனரான ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரை சேர்ந்த சச்சின் [ வயது 22 ] மற்றும் கடை உரிமையாளர் ராஜா ஆகிய இருவரையும் பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
விசாரணையில் ஆன்லைன் மூலம் குட்கா, ஹான்ஸ் உள்ளிட்ட போதை பொருட்களை ஆர்டர் செய்யும் நபர்களுக்கு பெங்களூரில் இருந்து சொகுசு கார் மூலம் கடத்தி சென்று சம்மந்தப்பட்ட நபர்களுக்கு டோர் டெலிவரி செய்து வந்ததும் தெடாவூரில் உள்ள மளிகை கடையில் சில மூட்டைகளை இறக்கிவிட்டு மீதி மூட்டைகளை பெரம்பலூருக்கு ராஜா மூலம் டெலிவரி செய்ய இருந்ததும் தெரியவந்தது.
Must Read : சுடுகாட்டில் மர்ம குழி.. மகள் வாங்கிய கடனுக்காக கொல்லப்பட்ட பெண் - கள்ளக்குறிச்சியை அதிர வைத்த சம்பவம்
இதனையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் 46 மூட்டைகளில் இருந்த 10 லட்சரூபாய் மதிப்பிலான ஹான்ஸ், குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் மற்றும் சொகுசு காரையும் பறிமுதல் செய்த தனிப்படை போலீசார் இருவரிடமும் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Gutka scam, Salem, Smuggling