Home /News /salem /

சேலத்தில் சொத்து தகராறில் தாத்தா வீட்டை தீ வைத்து எரித்த பேரன்...

சேலத்தில் சொத்து தகராறில் தாத்தா வீட்டை தீ வைத்து எரித்த பேரன்...

தீ வைக்கப்பட்ட வீடு

தீ வைக்கப்பட்ட வீடு

Salem | சொத்து தகராறில் பேரன் தாத்தா வீட்டை தீ வைத்து எரித்த சம்பவம் சேலத்தில் நடந்துள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Salem, India
சேலம் மாவட்டம் கெங்கவல்லி  பேரூராட்சி  13 வது வார்டு  கணவாய்காடு பகுதியை சேர்ந்தவர் ராமசாமி  மகன்  பச்சமுத்து.  இவருக்கு சொந்தமான இரண்டு குடிசை வீடுகள் உள்ளன. ஒரு  வீட்டில் பச்சமுத்து குடியிருந்து கொண்டு மற்றொரு வீட்டை மூக்காயி என்பவருக்கு  வாடகைக்கு விட்டுள்ளார்.

இதனிடையே பச்சமுத்துவின் அக்காள் பவுனாம்பாளின் பேரன் விஜய் ( 25 ) என்பவர் பூர்வீக சொத்தான குடிசை வீட்டில்  தனக்கு உள்ள பங்கை பிரித்து தருமாறு தாத்தாவிடம் கேட்டுள்ளார் . ஆனால் சொத்தில் பங்கு தர முடியாது என பச்சமுத்து  தெரிவித்ததால் ஆத்திரமடைந்த விஜய் மது போதையில் வீடுகளில்  யாரும் இல்லாத சமயத்தில் குடிசைகளுக்கு தீ வைத்துள்ளார்.

Also see... பண்ருட்டியில் பத்தாம் நூற்றாண்டை சேர்ந்த சோழர் கால பெருமாள் சிலை கண்டெடுப்பு...

இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் கெங்கவல்லி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை  அணைத்தனர் . இந்நிலையில் பச்சமுத்து  குடியிருக்கும் வீடுகாலியாக இருப்பதால்  எவ்வித சேதாரமும் ஏற்படவில்லை. மூக்காயி குடியிருக்கும்  வீட்டிலிருந்த அனைத்து பொருட்களும் தீயில் கருகி சேதமானது. இந்த  தீ விபத்து  குறித்து கெங்கவல்லி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .
Published by:Vaijayanthi S
First published:

Tags: Crime News, Fire, Property, Salem

அடுத்த செய்தி