ஹோம் /நியூஸ் /சேலம் /

அரசு பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை... ஆசிரியரை தாக்கிய பெற்றோரால் பரபரப்பு..!

அரசு பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை... ஆசிரியரை தாக்கிய பெற்றோரால் பரபரப்பு..!

பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர்கள்

பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர்கள்

சேலம் அருகே அரசு நடுநிலைப் பள்ளியில் பணியாற்றி வரும் ஆசிரியர் மாணவிகளிடம் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக புகார் எழுந்துள்ளது. ஆத்திரமடைந்த பெற்றோர் ஆசிரியரை தாக்கி பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Salem, India

சேலம் அருகே சேலத்தாம்பட்டி அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 5 ஆம் வகுப்பு வரை ஆசிரியராக பணியாற்றி வருபவர் சுரேஷ்பாபு. பள்ளி வளாகத்தில் இவர் தொடர்ந்து ஒழுங்கீன நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது. குறிப்பாக நாள்தோறும் மது அருந்திவிட்டு பள்ளிக்கு வரும் சுரேஷ் பாபு மாணவியரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகவும், மாணவியர் கழிப்பிடம் அருகே நின்று புகை பிடிப்பது, மாணவ மாணவியரை கைக்கால்கள்  பிடித்துவிடச் சொல்வது போன்ற நடவடிக்கையில் ஈடுபடுவதாக பெற்றோர் தரப்பில் குற்றம் சாட்டப்படுகிறது.

இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியர் முஹரத்பேகத்திடம்  மாணவியர் புகார் தெரிவித்ததாகவும் ஆனால் அதை உதாசீனப்படுத்திய தலைமை ஆசிரியர் இது குறித்து வீட்டில் சொல்லக்கூடாது என மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஆசிரியரின் ஒழுங்கீன நடவடிக்கைகள் தொடரவே மாணவியர் பெற்றோரிடம் கூறியதை அடுத்து பள்ளிக்கு வந்த பெற்றோர் சம்பந்தப்பட்ட ஆசிரியர் சுரேஷ்பாபுவை ஆத்திரத்தில் தாக்கியுள்ளனர். தொடர்ந்து பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Also see... கொரோனா வைரஸ்... திருச்சி விமான நிலையத்திற்கு வந்த முக்கிய அலர்ட்

இது குறித்து தகவல் அறிந்த சூரமங்கலம் போலீசார் பள்ளிக்கு விரைந்து வந்து பள்ளி நிர்வாகம் ஆசிரியர் ஆசிரியர்கள் பாதிக்கப்பட்ட மாணவியரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மற்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ள சுரேஷ்பாபு இன்றைய தினமும் மது போதையில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

செய்தியாளர்: திருமலை தமிழ்மணி, சேலம்

First published:

Tags: Crime News, Govt teachers, Salem, Sexually harrassed