Home /News /salem /

அரசு பள்ளியின் 2வது மாடியில் இருந்து குதித்து 12 ஆம் வகுப்பு மாணவி தற்கொலை முயற்சி...

அரசு பள்ளியின் 2வது மாடியில் இருந்து குதித்து 12 ஆம் வகுப்பு மாணவி தற்கொலை முயற்சி...

தற்கொலை முயற்சி செய்த மாணவியை மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது...

தற்கொலை முயற்சி செய்த மாணவியை மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது...

மேச்சேரியில் அரசு பள்ளியில் 12 ஆம் வகுப்பு மாணவி தற்கொலை முயற்சி மேற்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

    சேலம் மாவட்டம், மேச்சேரி, அமரம் கிராமத்தை சேர்ந்த மாதேசன் காமாட்சி தம்பதியின் 16 வயது மகள் கோகிலாவாணி. மேச்சேரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று காலை வழக்கம் போல் பள்ளிக்கு வந்த மாணவி, வகுப்பறையில் தனது புத்தகப் பையை வைத்துவிட்டு, பள்ளியின் இரண்டாவது மாடிக்கு சென்றுள்ளார். அங்கிருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் மாணவி உடனடியாக சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், மாணவிக்கு வலது கால் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

    காவல்துறை நடத்திய முதல் கட்ட விசாரணையில், தற்கொலைக்கு முயன்ற மாணவிக்கு தந்தை இல்லாத நிலையில் தாயின் அரவணைப்பில்தான் இருந்து வருகிறார். இந்த நிலையில் அவருக்கும் அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. இந்த காதலுக்கு தாய் எதிர்ப்பு தெரிவித்ததால் மனமுடைந்த மாணவி பள்ளிக்கு சென்று பள்ளியின் மேல்மாடியிலிருந்து கீழே விழுந்து தற்கொலைக்கு முயன்றுள்ளது தெரியவந்துள்ளது.

    இதனை அடுத்து அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மாணவியை மாவட்ட ஆட்சியர் கார்மேகம் மற்றும் காவல் துறை அதிகாரிகள் மாணவியை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்ததுடன், தற்கொலை முயற்சிக்கான காரணம் குறித்தும் கேட்டனர்.

    அதன் பிறகு செய்தியாளர்கள் பேட்டி அளித்த மாவட்ட ஆட்சியர் கார்மேகம், மாணவியின் தற்கொலை முயற்சிக்கு அவரது குடும்ப பிரச்சனையே காரணம் என்று தெரிவித்தார். மன உளைச்சலில் இருந்த மாணவி இதுபோன்று தற்கொலைக்கு முயன்றதாக கூறிய அவர், மாணவர்கள் தங்களது பிரச்சினைகள் குறித்து ஆசிரியர்களிடம் தெரிவிக்க வேண்டும் என்றும் அவர் அறிவுரை வழங்கினார்.

    சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம்


    Also see... பாலியல் தவறுகள் நடந்தால் மாணவிகள் காவல்துறையை அணுக வேண்டும்...

    மேலும், மாணவர்களுக்கு இனிமேல் இதுபோன்ற சூழ்நிலை ஏற்படாமல் இருக்க அவர்களுக்கு கவுன்சிலிங் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆட்சியர் கார்மேகம் தெரிவித்தார்.

    செய்தியாளர்: திருமலை தமிழ்மணி, சேலம்
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Government school, Salem, Suicide attempt

    அடுத்த செய்தி