Home /News /salem /

சேலத்தில் அரசு பொருட்காட்சி தொடங்கியது.. ரூ.5 கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

சேலத்தில் அரசு பொருட்காட்சி தொடங்கியது.. ரூ.5 கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

சேலத்தில் அரசு பொருட்காட்சி தொடங்கியது

சேலத்தில் அரசு பொருட்காட்சி தொடங்கியது

Salem | சேலத்தில் அரசு பொருட்காட்சியை செய்தி துறை அமைச்சர் சாமிநாதன் மற்றும் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு ஆகியோர் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Salem, India
    தமிழக அரசின் திட்டங்களை பொதுமக்கள் எளிதாக அறிந்து பயன்பெறும் வகையில் செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய அரசு பொருட்காட்சி பல்வேறு மாவட்டங்களில் நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக சேலம் மாவட்டத்தில் அரசு பொருட்காட்சி சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள மாநகராட்சி மைதானத்தில் நேற்று தொடங்கியது.

    இந்த அரசு பொருட்காட்சியை தமிழக செய்தி துறை அமைச்சர் சுவாமிநாதன் மற்றும் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என் நேரு ஆகியோர் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தனர். அதனை தொடர்ந்து அரசு பொருட்காட்சியில் அமைக்கப்பட்டுள்ள பல்வேறு அரசு துறைகளின் அரங்குகளை அமைச்சர்கள் பார்வையிட்டனர். . நேற்று தொடங்கிய இந்த பொருட்காட்சி 45 நாட்கள் நடைபெறவுள்ளது.

    இந்த அரசு பொருட்காட்சியில் 26 அரசுத்துறை அரங்குகளும் 6 அரசு சார்பு நிறுவனங்களின் அரங்குகள் என 32 அரங்குகள் இடம் பெற்றுள்ளன. இந்த அரங்குகளில் அரசின் நலத்திட்ட உதவிகள் அவற்றை பெறுவதற்கான வழிமுறைகள் காட்சிப் படுத்தப்பட்டுள்ளன. மேலும் குழந்தைகள் மற்றும் பொதுமக்களை மகிழ்விக்கும் வகையில் பல்வேறு விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளது.



    இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கார்மேகம், மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து 206 பேருக்கு 5 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர்களான கே.என்.நேரு,  சுவாமிநாதன் வழங்கினர்.

    Also see... உலகின் பிரம்மாண்டமான ஆடம்பர ரயில்களின் பட்டியல்.

    விழாவில் பேசிய செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறை அமைச்சர் சுவாமிநாதன், “ கோவை மற்றும் மதுரையில் நடைபெற்ற அரசு பொருட்காட்சி மூலம் 37 லட்சம் ரூபாய் அரசுக்கு வருவாய் கிடைத்துள்ளது என்றும் இந்த அரசு பொருட்காட்சியை 4 லட்சம் பேர் பார்வையிட்டுள்ளதாகவும்” குறிப்பிட்டார்.

    செய்தியாளர்: திருமலை தமிழ்மணி, சேலம்
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Salem

    அடுத்த செய்தி