Home /News /salem /

மேட்டூரில் 3 நாளாக அரசு மருத்துவர்கள் உண்ணாவிரதப் போராட்டம்

மேட்டூரில் 3 நாளாக அரசு மருத்துவர்கள் உண்ணாவிரதப் போராட்டம்

மருத்துவர்கள் போராட்டம்

மருத்துவர்கள் போராட்டம்

Salem : 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசு மருத்துவர்கள் சேலம் மாவட்டம் மேட்டூரில் நடத்திவரும் உண்ணாவிரதப் போராட்டம் இன்று 3ஆவது நாளை எட்டியுள்ளது.

    சேலம் மாவட்டம் மேட்டூரில், ஊதிய உயர்வு உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசு மருத்துவர்கள் நடத்திவரும் உண்ணாவிரதப் போராட்டம் 3ஆவது நாளாக இன்றும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    தமிழக அரசு மருத்துவர்கள், மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதிய விகிதம் உள்ளிட்ட 10 கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, தமிழக அரசு மருத்துவர்கள் சங்கத்தினர் மேட்டூரில் உள்ள, மறைந்த அரசு மருத்துவர் சங்கத் தலைவர் லட்சுமி நரசிம்மன் நினைவிடத்தில் சாகும்வரை உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகின்றனர்.

    மருத்துவர்கள் தங்களின் கோரிக்கைகள் குறித்து முதலமைச்சரிடம் 5 முறை கோரிக்கை வைத்தும் அதில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்நிலையில், மருத்துவர்களின் உண்ணாநிலை 3ஆவது நாளாக இன்றும் நீடித்துவரும் நிலையில், தமிழக அரசு தங்களுடன் பேசி கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

    Must Read : வரிகள் தொடங்கி அபராதம் வரை.. ஜூலை 1 முதல் 6 முக்கிய மாற்றங்கள்! - கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க

    டாக்டர் எஸ்.பெருமாள் பிள்ளை தலைமையில் நடைபெற்று வரும் இந்த போராட்டத்தில் 60-க்கும் மேற்பட்ட அரசு மருத்துவர்கள் கலந்துகொண்டுள்ளனர்.
    Published by:Suresh V
    First published:

    Tags: Doctors Strike, Govt Doctors, Salem

    அடுத்த செய்தி