முகப்பு /செய்தி /சேலம் / குறுக்கே வந்த நாய்.. திடீர் பிரேக் போட்ட டிரைவர் - தவறி விழுந்த நடத்துநர் பலி

குறுக்கே வந்த நாய்.. திடீர் பிரேக் போட்ட டிரைவர் - தவறி விழுந்த நடத்துநர் பலி

சேலம் பேருந்து - நடத்துனர் பலி

சேலம் பேருந்து - நடத்துனர் பலி

Salem | நாய் குறுக்கே வந்ததால் திடீர் பிரேக் போட்ட அரசு பேருந்து ஓட்டுநர். அதில் நிலை தடுமாறி தவறி கிழே விழுந்த நடத்துநர் உயிரிழந்தார்.

  • Last Updated :
  • Salem, India

சேலம் அத்தனூர் பகுதியைச் சார்ந்தவர் ராஜேந்திரன் (வயது 56). இவர் சேலம் அரசு போக்குவரத்து கழகத்தில் நடத்துநராக பணியாற்றி வருகிறார். இன்று காலை ராஜேந்திரன், சேலம் பழைய பேருந்து நிலையத்திலிருந்து செட்டிசாவடி செல்லும் டவுன் பஸ்சில் நடத்துநராக சென்றார். இந்த பேருந்தை ஓட்டுநர் சீனிவாசன் என்பவர் ஓட்டிச் சென்றார்.

இந்த பேருந்து இன்று காலை 8:00 மணி அளவில், பேருந்து நிலையத்திலிருந்து செட்டிச் சாவடிக்கு புறப்பட்டு சென்றது. பின்னர் அங்கிருந்து புறப்பட்டு பழைய பேருந்து நிலையம் நோக்கி வந்தது கொண்டிருந்தது. அப்போது பசவக்கல் பேருந்து நிறுத்தம் அருகே வந்துபோது, பேருந்தின் குறுக்கே நாய் ஒன்று வந்தது. அதனை பார்த்த சீனிவாசன் நாய் மீது மோதாமல் இருக்க சடன் பிரேக் போட்டுள்ளார்.

அப்போது பேருந்தின் முன்பக்க படிகட்டில் நின்று கொண்டிருந்த நடத்துநர் ராஜேந்திரன் கீழே சாலையில் விழுந்தார். கீழே விழுந்த நடத்துனர் ராஜேந்திரன் தலையில் அடிப்பட்டு, துடிதுடித்து உயிருக்கு போராடினார். அதே பேருந்தில் உடனடியாக ராஜேந்திரனை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்த்தனர்.

Also see... வரதட்சணை கொடுமை - இளம்பெண் தற்கொலை

அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர், ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர். இந்த விபத்து குறித்து கன்னங்குறிச்சி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

top videos
    First published:

    Tags: Accident, Bus, Crime News, Dead, Salem