Home /News /salem /

கோகுல்ராஜ் கொலை வழக்கில் அனைவருக்கும் தண்டனை வழங்க வேண்டும் - தாயார் சித்ரா மனு தாக்கல்

கோகுல்ராஜ் கொலை வழக்கில் அனைவருக்கும் தண்டனை வழங்க வேண்டும் - தாயார் சித்ரா மனு தாக்கல்

கோகுல்ராஜ் கொலை வழக்கு

கோகுல்ராஜ் கொலை வழக்கு

கோகுல்ராஜ் கொலை வழக்கில் அவரது தாய் சித்ரா உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இடையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார். யுவராஜ் உட்பட 10 பேர் தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி ஏற்கனவே மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
சேலம் மாவட்டம் ஓமலூரை  சோ்ந்த பொறியியல் மாணவா் கோகுல்ராஜ்  கொலை வழக்கில், சங்ககிரியைச் சோ்ந்த தீரன் சின்னமலை பேரவை நிறுவனா் யுவராஜ் உள்பட 10 பேருக்கு  விதிக்கப்பட்ட ஆயுள்  தண்டனைகளை, எதிர்த்து  உயர்நீதிமன்றம் மதுரை கிளையில்  தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மேல் முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணையில்,   நாமக்கல் மாவட்ட CBCID ASP,  CBCID இன்ஸ்பெக்டர் பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் கோரினர். இதை தொடரந்து வழக்கு விசாரணையை ஜூன் 6 ம் தேதி ஒத்தி வைத்து உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டது. கோகுல்ராஜின் தாய் சித்ராவுக்கும்  நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்றம் மதுரை கிளை  உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில் கோகுல்ராஜின் தாய் சித்ரா, உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் மேல் முறையீட்டு இடையீட்டு மனு தாக்கல் செய்து உள்ளார். அந்த மனுவில் , வழக்கில் அனைவருக்கும் தண்டனை வழங்க வேண்டும், இந்த வழக்கில் என்னையும் எதிர்மனுதாரராக சேர்க்க வேண்டும் என மேல்முறையீட்டு இடையீட்டு மனு வில் கூறி உள்ளார்.

Also see...கிராம சபை கூட்டத்தில் கேள்வி கேட்ட நபருக்கு மண்டை உடைப்பு
 இந்த மனு நீதிபதிகள்பிரகாஷ், மற்றும் ஹேமலதா  அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. இடையீட்டு மனுவை ஏற்று  கொண்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை  செப்டம்பர் 23 ம் தேதி ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
Published by:Vaijayanthi S
First published:

Tags: Madurai High Court, Murder case, Salem

அடுத்த செய்தி