ஹோம் /நியூஸ் /சேலம் /

தரம் பார்த்து ஆடுகளை திருடும் திருடன்.. காட்டிக்கொடுத்த சிசிடிவி காட்சிகள் - சேலத்தில் பரபரப்பு

தரம் பார்த்து ஆடுகளை திருடும் திருடன்.. காட்டிக்கொடுத்த சிசிடிவி காட்சிகள் - சேலத்தில் பரபரப்பு

ஆட்டு திருடன்

ஆட்டு திருடன்

கெங்கவல்லி அருகே இரவு நேரத்தில் ஆட்டுப்பட்டியில் கட்டப்பட்டிருந்த ஆடுகளை தரம் பார்த்து திருடி சென்ற மர்ம ஆசாமி குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Salem, India

சேலம் மாவட்டத்தில் ஆடுகளை தரம் பார்த்து திருடி செல்லும் திருடர்கள் குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சேலம் மாவட்டம் கெங்கவல்லி பேரூராட்சிக்கு உட்பட்ட 15வது வார்டு தெற்குக்காடு பகுதியில் வசிப்பவர் ஆறுமுகம் மகன் செம்மலை. இவர் தனது விவசாய தோட்டத்தில் ஆடு, மாடுகளை வளர்த்து வருகிறார்.  இந்நிலையில் பட்டியில் கட்டப்பட்டிருந்த இவரது ஆடுகள் அடிக்கடி திருடு போயுள்ளது.

இதுதொடர்பாக செம்மலை கெங்கவல்லி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து போலீசார் உரிய நடவடிக்கை எடுக்காததால் மன உளைச்சலுக்கு ஆளானர். இந்நிலையில் ஆடு திருடனை கையும் களவுமாக பிடிக்க எண்ணிய செம்மலை தனது வீட்டின் அருகில் சிசிடிவி கேமராவை பொருத்தி கண்காணித்து வந்துள்ளார்.

Also Read: படுத்த படுக்கையான தாய்.. 2 வாரத்தில் திருமணம் நடைபெற இருந்தநிலையில் மகள் எடுத்த விபரீத முடிவு

இதனிடையே நேற்றிரவு ஆட்டுப் பட்டிக்கு வந்த மர்ம ஆசாமி ஒருவர் ஆடுகளை பிடித்து தரம் பார்த்த பின்பு ஒரு வெள்ளாட்டை திருடி செல்லும் வீடியோ பதிவாகியுள்ளது, இதனை தொடர்ந்து செம்மலை சிசிடிவி கேமராவில் பதிவான மர்ம ஆசாமியின் வீடியோ ஆதரத்துடன் கெங்கவல்லி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ஆடு திருடனை தேடி வருகின்றனர்.

Published by:Ramprasath H
First published:

Tags: Crime News, Local News, Salem, Theft