ஹோம் /நியூஸ் /சேலம் /

சேலத்தில் கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்து.. ஒரு மாத குழந்தை உள்ளிட்ட 7பேர் காயம்..

சேலத்தில் கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்து.. ஒரு மாத குழந்தை உள்ளிட்ட 7பேர் காயம்..

சேலம்

சேலம்

Salem | சேலத்தில் சிலிண்டர் வெடித்ததில் முதல் மாடியின் சுவர்கள் இடிந்து விழுந்ததில்10 மாத கைக்குழந்தை உள்பட 7 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Salem, India

சேலம் மாநகராட்சி பகுதியில் உள்ளது பொன்னம்மாப்பேட்டை. இங்குள்ள அண்ணா நகர் மூன்றாவது தெருவில் உள்ள மாடி வீட்டில் வசித்து வருபவர் மாணிக்கம் (வயது 60). இவர் திருமணங்களுக்கு சமையல் வேலைக்கு ஆட்களை அனுப்பி வரும் தொழில் செய்து வருகிறார். நேற்று இரவு வீட்டில் மாணிக்கம் அவரது குடும்பத்தினர் படுத்து தூங்கிக் கொண்டிருந்தனர்.

இந்த நிலையில் இன்று அதிகாலை திடீரென வீட்டில் இருந்த சிலிண்டர் வெடித்து சிதறியது. இதனால் மாடியில்  இருந்த மாணிக்கம், அவரது குடும்பத்தினரும் அலறி அடித்து வெளியில் ஓடி வந்தனர். சிலிண்டர் வெடித்ததால் மாடி பகுதி இடிந்து விழுந்தது.

இது தவிர ஜன்னல்  கண்ணாடிகள் வீட்டு கண்ணாடிகள் அனைத்தும் நொறுங்கி விழுந்தது.

இந்த விபத்தில் மாணிக்கம் (வயது 65 )அவரது மனைவி ராஜேஸ்வரி, மகள் பானு மற்றும் பானுவின் குழந்தை தீட்சிதா(வயது 4) மாணிக்கத்தின் மற்றொரு மகள் பிரியா, இவரது குழந்தைகள் அவினேஷ் (வயது 7) பத்து நாள் ஆன குழந்தை உள்ளிட்ட 7 பேர் படுகாயம் அடைந்தனர்.

இவர்களை அருகில் இருந்தவர்கள் உடனே சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் .

இந்த விபத்தை அறிந்த சேலம் அம்மாபேட்டை போலீசார் விரைந்து வந்து விசாரித்தனர். பிறகு சேலம் செவ்வாய்பேட்டை தீயணைப்பு நிலைய வீரர்கள் பத்துக்கும் மேற்பட்டோர் வந்து வீட்டுக்குள் இருந்த மூன்று சிலிண்டர்களை அகற்றினர்.

Also see... உலகில் இவ்வளவு பேர் வறுமையில் இருக்கிறார்களா?

சிலிண்டர் ஒன்று வெடித்ததால் வீடு முழுவதுமே சேதமாகி உள்ளது. கட்டித்தின் சுவர்கள் மற்றும் சீலிங்கில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.

விபத்து குறித்து சேலம் அம்மாபேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.  இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் மற்றும் கோட்டாட்சியர் விஷ்ணுவர்த்தினி மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் விரைந்து வந்து விபத்து நடந்த வீட்டை ஆய்வு செய்தனர் பிறகு வீடு முழுவதும் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் சென்று பார்வையிட்டார்

Published by:Vaijayanthi S
First published:

Tags: Gas cylinder blast, Injured, Salem