Home /News /salem /

டீ மாஸ்டரை தாக்கி மாமூல் கேட்டு அடாவடி - பிரபல ரவுடிக்கு வலை வீச்சு

டீ மாஸ்டரை தாக்கி மாமூல் கேட்டு அடாவடி - பிரபல ரவுடிக்கு வலை வீச்சு

சேலம் - டீ கடையில்; நடந்த சண்டை - சிசிடிவி வீடியோ

சேலம் - டீ கடையில்; நடந்த சண்டை - சிசிடிவி வீடியோ

salem | சேலத்தில் டீ மாஸ்டரை தாக்கி மாமுல் கேட்ட கும்பல் 17 வயது சிறுவன் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் பிரபல ரவுடியை போலீசார் தேடி வருகின்றனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    சேலம் மாநகரம் தாதகாப்பட்டி வில்லு கடை பஸ் ஸ்டாப் அருகே உள்ள டீக்கடையில் அம்மாபேட்டையை சேர்ந்த அப்துல் சுப்பு என்பவர் டீ மாஸ்டராக பணியாற்றி வருகிறார். இரண்டு தினங்களுக்கு முன்பு இரவு டீக்கடைக்கு 5பேர் கொண்ட கும்பல் வந்துள்ளது. அப்போது அங்கிருந்த அப்துல் சுப்புயிடம் சிகரெட் கேட்டுள்ளனர். அவர் இல்லை என தெரிவித்ததால், ஆத்திரமடைந்தவர்கள் அங்கிருந்த நான்கு சிகரெட் பாக்கெட்டுகளையும் எடுத்துச் சென்றுள்ளனர்.

    மேலும் சிகரெட் பற்ற வைத்து அந்த புகையை டீ மாஸ்டர் அப்துல் மீது ஊதியதோடு அவரிடம் மாமூல் கேட்டு தகராறு செய்துள்ளனர். மேலும் அவருடைய கன்னத்தில் அடித்து பிஸ்கட் வைத்திருந்த கண்ணாடி ஜாடியை எடுத்து அவர் தலை மீது தாக்கி அங்குள்ள பொருட்களை சூறையாடியுள்ளனர்.

    இதுகுறித்து அன்னதானப்பட்டி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். இதனையடுத்து அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் அப்துல் சுப்பு மீது புகை ஊதுவதும் அவரை அடிப்பதும் பொருட்களை உடைப்பதும் போன்ற காட்சிகள் பதிவாகி இருந்தது.

    Also see... க்யூஆர் கோடு’ ஸ்டிக்கரை ஒட்டி நூதன மோசடி செய்த இளைஞர்

    அதனை தொடர்ந்து அப்துல் சுபுவை தாக்கிய கார்த்திகேயன், சதீஷ்குமார், அப்துல், ஹரிகரன் மற்றும் 17 வயதுடைய சிறுவன் உட்பட நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

    மேலும் டீ மாஸ்டரை தாக்கியவர் பிரபல கொலை வழக்கில் தொடர்புள்ள ரவுடி ரஞ்சித்  என்பது தெரியவந்துள்ளது.  தலைமறைவாகியுள்ள நிலையில் அவரை கைது செய்ய காவல்துறையினர் தேடி வருகின்றனர். இந்நிலையில் டீக்கடையில் மாமூல் கேட்டு தகராறு செய்த சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    செய்தியாளர்: திருமலை தமிழ்மணி, சேலம்
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Arrested, Crime News, Salem, Tea Stall

    அடுத்த செய்தி