ஹோம் /நியூஸ் /சேலம் /

அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.1 கோடி மோசடி... எஸ்.பி.வேலுமணியின் ஓட்டுநர் எனக்‍கூறி ஏமாற்றியதாக பரபரப்பு புகார்!

அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.1 கோடி மோசடி... எஸ்.பி.வேலுமணியின் ஓட்டுநர் எனக்‍கூறி ஏமாற்றியதாக பரபரப்பு புகார்!

ஓட்டுநர் சுதாகர்

ஓட்டுநர் சுதாகர்

முன்னாள் அமைச்சர் எஸ்பி.வேலுமணியின் ஓட்டுநர் மீது புகார்...அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பணம் பெற்று, போலி நியமன ஆணை தயாரித்து வழங்கி ஏமாற்றியதாக குற்றச்சாட்டு...

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Salem, India

சேலம் மாநகர் மணியனூர் பகுதியை சேர்ந்தவர் தேன்மொழி. இவரும் சிலரும் சேலம் மாநகர காவல் ஆணையாளரிடம் புகார் மனு  ஒன்றை அளித்தனர். அதில் கோவை மாவட்டத்தை சேர்ந்த சுதாகர் என்பவர் கடந்த 2020ஆம் ஆண்டு முன்னாள் அமைச்சர் எஸ்பி.வேலுமணியின் ஓட்டுநராக பணியாற்றி வருவதாக கூறியதாகவும், அமைச்சர் மூலம் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் பண மோசடியில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பத்திர பதிவுத்துறையில் லெவல் ஒன்று முதல், லெவல் நான்கு வரையிலான பணிகளுக்கும், கிராம நிர்வாக அலுவலர் பணிகள் ஆகியவற்றை வாங்கி தருவதாக கூறி மூன்று லட்சம் முதல் 8 லட்சம் வரை ஒவ்வொருவரிடம் இருந்து பணம் பெற்றுள்ளதாக தெரிவிக்கும் பாதிக்கப்பட்டவர்கள், பின்னர் அரசு வேலை கிடைத்தது போன்று போலி நியமன ஆணை தயாரித்து பணம் பெற்றவர்களிடம் கொடுத்துள்ளதாக கூறுகின்றனர்.

இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அலுவலகங்களுக்கு சென்று கேட்டபோது, போலி நியமன ஆணை என்பது தெரியவந்ததாகவும்,  சேலம், ஈரோடு, கோவை, திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் ஏராளமானவரிடம் அரசு வேலை வாங்கித் தருவதாக ஒரு கோடிக்கு மேலாக பணமோசடியில் ஈடுபட்டுள்ளதாகவும் புகார்  தெரிவித்துள்ளனர்.

Also see... வால்பாறை அருகே மிரட்டும் ஒற்றை காட்டு யானை...

பணத்தை திரும்ப தரும்படி சுதாகரிடம் நேரில் சென்று கேட்டபோது, கொலை மிரட்டல் விடுவதாகவும், தகாத வார்த்தைகளால் திட்டுவதாகவும் குற்றம் சாட்டினர். எனவே இந்த மோசடி தொடர்பாக விசாரணை செய்து, சுதாகர் அவரது மனைவி பிரபாவதி, உறவினர் மகேஷ்குமார் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Published by:Vaijayanthi S
First published:

Tags: Salem, SP Velumani