ஹோம் /நியூஸ் /சேலம் /

பட்டாசு வெடித்தபோது நேர்ந்த விபரீதம் - நூல் உற்பத்தி ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 50 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்!

பட்டாசு வெடித்தபோது நேர்ந்த விபரீதம் - நூல் உற்பத்தி ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 50 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்!

தீ விபத்து

தீ விபத்து

fire Accident | சேலத்தில் பட்டாசு வெடித்த தீப்பொறியால் நூல் உற்பத்தி ஆலை முழுவதும் தீக்கிரையானது. குடோனுக்குள் இருந்த 50 லட்சம் மதிப்பிலான இயந்திரங்கள், நூல் உள்ளிட்டவைகள் முழுமையாக எரிந்தது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Salem, India

சேலம் குகை ராமலிங்கம் தெரு பகுதியில் செல்வராஜ் என்பவருக்கு சொந்தமான நூல் உற்பத்தி செய்யும் உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதில் தயாரிப்பு இயந்திரங்கள் மற்றும் அதற்கான நூல், துணிகள் உள்ளிட்ட உபகரணங்கள் இருந்தது.

இந்த நிலையில் நேற்று இரவு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இப்பகுதியில் பட்டாசு வெடிக்கப்பட்டது. அப்போது பட்டாசு வெடித்து தீப்பொறி முதல் மாடியில் உள்ள  ஜன்னல் வழியாக நூல்கள் வைக்கப்பட்டுள்ள குடோனுக்குள் விழுந்தது. அப்போது லேசாக பற்றிய நெருப்பு மளமளவென பரவி குடோனில் வைக்கப்பட்டிருந்த நூல் உற்பத்தி இயந்திரங்கள், நூல்கள், துணிகள் உள்ளிட்ட அனைத்தும் பற்றி எரியத்துவங்கியது.

உடனே செவ்வாய்பேட்டை  தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் 3 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும் தீயை அணைப்பதற்குள் குடோனில் வைக்கப்பட்டிருந்த 50 லட்சம் மதிப்பிலான அனைத்து பொருட்களும் தீக்கரையானது.

Also see... அரியலூர் அருகே 2 பெண்கள் கொலை  வழக்கில் திடீர் திருப்பம்

இந்த தீயை  5 வாகனங்களில் கொண்டுவரப்பட்ட தண்ணீரை கொண்டு போராடி தீ அணைக்கப்பட்டது. இது தொடர்பாக செவ்வாய்பேட்டை காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Published by:Vaijayanthi S
First published:

Tags: Fire accident, Salem