ஹோம் /நியூஸ் /சேலம் /

தந்தையை ஓட ஓட விரட்டி வெட்டிக்கொன்ற மகன்.. ஆத்தூரில் அதிர்ச்சி சம்பவம்

தந்தையை ஓட ஓட விரட்டி வெட்டிக்கொன்ற மகன்.. ஆத்தூரில் அதிர்ச்சி சம்பவம்

கொலை செய்யப்பட்ட நபர்

கொலை செய்யப்பட்ட நபர்

Crime News: ஆத்தூர் அருகே  தாயை தாக்கிய தந்தையை நள்ளிரவில் மீன் வெட்டும் கத்தியால் ஓட, ஓட, விரட்டி வெட்டி படுகொலை செய்த வளர்ப்பு மகன்..

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Attur, India

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள சக்திநகர் புத்துமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி கிருஷ்னராஜ் இவர் முதல் மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த கணவனை இழந்து மகனுடன் தனியாக வசித்து வந்த மீனாவை (வயது 45) கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இரண்டாவது திருமணம் செய்து கொண்டு மூன்று பேரும் தனியாக வசித்து வந்துள்ளனர்.

இதனிடையே கிருஷ்ணராஜ் மற்றும் அவரது இரணடாவது மனைவி மீனாவிற்கும் அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று நள்ளிரவு கணவன், மனைவிக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது, அப்போது கிருஷ்ணராஜ் மனைவி மீனாவை சரமாரி தாக்கியுள்ளார்.  இதைப்பார்த்த மீனாவின் மகன் விக்னேஷ்  தந்தையை தட்டிக்கேட்டுள்ளார், ஆனால் இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு கைகலப்பாக மாறியுள்ளது.

அப்போது ஆத்திரமடைந்த விக்னேஷ் வீட்டில் இருந்த மீன் வெட்டும் கத்தியை எடுத்து தந்தையை கழுத்தில் சராமாரி வெட்டியுள்ளார். வளர்ப்பு மகனிடம் இருந்து தப்பித்து ஓட முயன்றபோது அருகில் உள்ள கதிரேசன் என்பவர் வீட்டில் தஞ்சமடைய முயன்றுள்ளார்,    ஆனால் ஓட, ஓட, விரட்டி சென்று தந்தையை சராமாரி வெட்டியுள்ளார். இதில் இரத்த வெள்ளத்தில் சரிந்த கிருஷ்ணராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

Also Read: திருடுவதற்கு பஸ்சில் மட்டுமே போகும் கொள்ளையன்.. சிக்கும் பணத்தில் துணை நடிகைகளுடன் உல்லாசம் - பலே திருடன் கைது

இச்சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற நகர போலீசார் உயிரிழந்த கிருஷ்ணராஜீன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார் வளர்ப்பு மகன் விக்னேஷிடன் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர், தாயை தாக்கிய தந்தையை ஓட, ஓட, விரட்டி மீன் வெட்டும் கத்தியால் வளர்ப்பு மகன் வெட்டிப் படுகொலை செய்த இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

First published:

Tags: Crime News, Local News, Murder, Salem, Tamil News