ஹோம் /நியூஸ் /சேலம் /

தீபாவளி சீட்டு நடத்தியவர் குடும்பத்துடன் தலைமறைவு.. சீட்டு கட்டியவர்கள் அதிர்ச்சி..!

தீபாவளி சீட்டு நடத்தியவர் குடும்பத்துடன் தலைமறைவு.. சீட்டு கட்டியவர்கள் அதிர்ச்சி..!

பாதிக்கப்பட்ட மக்கள்

பாதிக்கப்பட்ட மக்கள்

தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்கும், குடும்ப பிரச்சினைகளுக்கு சிறுக சிறுக சேர்த்து சீட்டு போட்டு வந்த நிலையில் அனைவரையும் ஏமாற்றிவிட்டதாக வேதனை தெரிவிக்கின்றனர்.

  • 2 minute read
  • Last Updated :
  • Salem | Salem

    சேலத்தில் தீபாவளி சீட்டு நடத்தியவர் குடும்பத்துடன் தலைமறைவானதால், பாதிக்கப்பட்ட பொதுமக்கள் சேலம் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் தெரிவித்துள்ளனர்.

    சேலம் மாநகர் குகை அருகே பச்சையம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராமமூர்த்தி (72). இவரது மகன் ஆனந்த்பாபு (38). வெள்ளி மற்றும் தங்க நகை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வந்த இவர், அப்பகுதியை சுற்றியுள்ள மக்களிடம் சிறுசேமிப்பு சீட்டும் நடத்தி வந்துள்ளார். வெள்ளி சீட்டு,  தீபாவளி சீட்டு, ஏலச்சீட்டு என பல்வேறு வகையான சீட்டுகளை கடந்த 10 ஆண்டுகளாக நடத்தி வந்ததாக கூறப்படுகிறது.

    இவரிடம் சேலம் செவ்வாப்பேட்டை, குகை, லைன்மேடு, அரிசிபாளையம், கிச்சிபாளையம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் சீட்டு பணம் செலுத்தி வந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு இருந்து, 52 வார தீபாவளி சீட்டுகள் முடிந்த நிலையில் அதற்கான பணம் தருவதில் காலதாமதம் செய்து வந்துள்ளார்.

    சீட்டு போட்டவர்கள் கொடுத்த நெருக்கடியை அடுத்து அனைவருக்கும் கடந்த வாரம் திங்கட்கிழமை அன்று பணம் கொடுப்பதாக கூறி, ஒரே நாளில் வர சொல்லிவிட்டு அன்று குடும்பத்துடன் தலைமறைவாகியுள்ளார். பொதுமக்களை வரசொல்லி இருந்த நாளில், அனைவரும் சென்று பார்த்தபோது குடும்பத்துடன் ஆனந்த்பாபு தலைமறைவாக இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

    மேலும், இது தொடர்பாக சேலம் மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் நேரில் சென்று புகார் அளித்தனர்.

    இவர் கடந்த வாரம் வரை சீட்டுக்காக பணம் வசூல் செய்து வந்துள்ளதாகவும், தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்கும், குடும்ப பிரச்சினைகளுக்கு சிறுக சிறுக சேர்த்து சீட்டு போட்டு வந்த நிலையில் அனைவரையும் ஏமாற்றிவிட்டதாக வேதனை தெரிவிக்கின்றனர். இவரிடம் சுமார் 10 கோடி ரூபாய் வரை ஏமாந்துவிட்டதாக  வேதனை தெரிவிக்கும் அவர்கள், எப்படியாவது இழந்த பணத்தை மீட்டுத் தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Also read | எனது மகனை பழிவாங்க வேண்டாம் - முதல்வர் ஸ்டாலினுக்கு சவுக்கு சங்கரின் தாயார் கடிதம்

    இதனிடையே ஆனந்த்பாபு குடும்பத்தார் செய்து கொடுத்த வெள்ளி, தங்க ஆபரணங்களுக்கு கூலி கொடுக்க வேண்டிய, 10 க்கும் மேற்பட்ட தொழிலதிபர்கள், கூலி கொடுக்கவில்லை எனவும் கூறப்படுகின்றது.  அதே போல் தீபாவளி நெருங்குவதால் சீட்டு போட்டவர்களுக்கு பணம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டதால் மன உளைச்சலில், ராமமூர்த்தி, அவரது மனைவி கஸ்துாரி, மகன் ஆனந்தபாபு, அவரது மனைவி ஐஸ்வர்யா, அவர்களது மகள்கள் ஆகியோர், கடந்த திங்கட்கிழமை வீட்டை பூட்டிச்சென்று விட்டதாகவும் கூறப்படுகின்றது.

    இதுகுறித்து ராமமூர்த்தியின் மகளான, குகையை சேர்ந்த சாந்தாவும் (39) நேற்று செவ்வாய்ப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இந்த வழக்கை பதிவு செய்த போலீசார், தலைமறைவாகியுள்ள குடும்பத்தினரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

    Published by:Anupriyam K
    First published:

    Tags: Cheating, Deepavali, Diwali, Salem