ஹோம் /நியூஸ் /சேலம் /

பேய் விரட்ட முறத்தால் அடி வாங்கிய பெண்கள்..! சேலத்தில் நடைபெற்ற வினோத திருவிழா

பேய் விரட்ட முறத்தால் அடி வாங்கிய பெண்கள்..! சேலத்தில் நடைபெற்ற வினோத திருவிழா

பொன்னாரம்பட்டி கிராமத்தில் நடைபெற்ற பேய் திருவிழா

பொன்னாரம்பட்டி கிராமத்தில் நடைபெற்ற பேய் திருவிழா

Salem Exorcism festival | பொன்னாரம்பட்டி கிராமத்தில் நடைபெற்ற இந்த வினோத விழாவில், ஏராளமான பெண்கள் தானாக முன்வந்து வரிசையில் நின்று காத்திருந்து பூசாரியிடம் முறத்தடி வாங்கி கொண்டனர். 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Salem, India

சேலம் மாவட்டம் வாழப்பாடி,  வித்தியாசமான திருவிழாக்கள், வியப்பூட்டும் வழிபாட்டு முறைகளுக்கு பெயர் பெற்றதாகும். வாழப்பாடி பகுதியில் உள்ள பொன்னாரம்பட்டி கிராமத்தில், இந்த அதிநவீன காலத்திலும்  பேய் விரட்டும் திருவிழா நடைபெற்றது.

பேய் விரட்டும் திருவிழா நடத்துவதற்காகவே பரம்பரை உரிமை கொண்ட பூசாரி குடும்பத்தினர், பொங்கல் பண்டிகை தொடங்குவதற்கு முன்பே, அசைவ உணவுகளை சாப்பிடாமலும், காலணிகள் அணியாமலும் விரதம் இருக்கின்றனர். காணும் பொங்கல் தினத்தன்று பேய் விரட்டுவதற்காக முன்னோர்கள் வடிவமைத்து கொடுத்த கருப்பு நிற ஆடையை அணிந்து கொண்டு காட்டேரி வேடம் பூண்டு மேள வாத்தியம் முழங்க, பூசாரிகள் ஆற்றங்கரைக்கு செல்வார்கள்.

அங்கு கூடியிருக்கும் பெண்களை அழைத்து தலைமுடியை கையில் பிடித்து கொண்டு மூங்கிலால் முடையப்பட்ட முறத்தால் தலையில் 3 முறை அடிப்பார்கள். பிறகு நெற்றியில் விபூதி வைத்து அனுப்பி விடுவார்கள்.

விரதமிருந்து சிறப்பு பூஜை வழிபாடு நடத்திய பிறகு பேய் விரட்டும் காட்டேரி வேடமிட்ட இந்த பூசாரிகளிடம் முறத்தடி வாங்கினால், திருமணம் விரைவாக கைகூடி நல்ல வரனும், குழந்தை பாக்கியம் கிடைக்குமென நம்பிக்கை தொடர்ந்து வருகிறது. இந்த வினோத விழாவில், ஏராளமான பெண்கள் தானாக முன்வந்து வரிசையில் நின்று காத்திருந்து, பூசாரியிடம் முறத்தடி வாங்கி கொண்டனர்.

First published:

Tags: Local News, Salem