Home /News /salem /

சேலத்தில் ஓய்வு பெற்ற எஸ்.ஐ மீது தாக்குதல் - கண் பார்வை பறிபோனதாக புகார்!

சேலத்தில் ஓய்வு பெற்ற எஸ்.ஐ மீது தாக்குதல் - கண் பார்வை பறிபோனதாக புகார்!

ஓய்வு பெற்ற காவலர்

ஓய்வு பெற்ற காவலர்

குத்தகை காலம் முடிவதற்குள் நிலத்தை விற்பனை செய்ததால், அதற்கு இழப்பீடாக ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் பிரபுவிற்கு ரூ.3 லட்சம் தருவதாக முடிவெடுத்துள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Salem, India
ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் ஒருவரை நிலத்தகராறு காரணமாக  4 பேர் கொண்ட கும்பல் கல்லால் தாக்கியதில், அவரது இடது கண் பார்வை பறிபோனதாக புகார் அளித்துள்ளார்.

சேலம் மாவட்டம் இடையப்பட்டி பகுதியில் வசித்து வருபவர் ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் பிரபு. இவர் அதே பகுதியில் உள்ள சபீருசேன் என்பவருக்கு சொந்தமான 8 ஏக்கர் விவசாய நிலத்தை குத்தகைக்கு எடுத்து கடந்த 20 ஆண்டுகளாக விவசாயம் செய்து பராமரித்து வந்துள்ளார்.

இதனிடையே சபீருசேன் தன்னுடய 8 ஏக்கர் விவசாய நிலத்தை மல்லிகா என்பவருக்கு விற்பனை செய்துள்ளார். குத்தகை காலம் முடிவதற்குள் நிலத்தை விற்பனை செய்ததால், அதற்கு இழப்பீடாக ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் பிரபுவிற்கு ரூ. 3 லட்சம் தருவதாக முடிவெடுத்துள்ளனர்.

இதையும் வாசிக்க: நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர்கள் 80% தோல்வி: அரசே பொறுப்பேற்க வேண்டும் -அன்புமணி ராமதாஸ்

அதன்படி பணத்தை வாங்குவதற்காக இன்று காலை பிரபு மற்றும் அவரது நண்பர் பழனிமுத்து ஆகிய இருவரும் இடையப்பட்டியில் உள்ள தாதம்பட்டியார் வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது அங்கு சொகுசு காரில் வந்த நெல்சன், ரூபன், வசந்த், மல்லிகா ஆகிய நான்கு பேரும் பிரபுவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் கீழே கிடந்த கல்லை எடுத்து பிரபுவை சராமாரி தாக்கியதாக கூறப்படுகிறது.

இதில் படுகாயமடைந்த பிரபுவை அவரது நண்பர் பழனிமுத்து மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். இதனையடுத்து, கல்லால் தாக்கியதில் பிரபு தனது இடது கண் பார்வை இழந்து விட்டதாக காவல்நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் குறித்து ஏத்தாப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Published by:Siddharthan Ashokan
First published:

Tags: Attacked, Crime News, Salem

அடுத்த செய்தி